என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மருத்துவம் அறிவோம்- வயிற்றில் ஏற்படும் நோய்களை தடுக்க
- வயிற்று வலி, வயிற்றில் சங்கடம், நெஞ்செரிச்சல் உணர்வு, குறிப்பாக வயிற்று மேல் பகுதியில் காணப்படும்.
- எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவர் ஆலோசனை பெறுவதே நல்லது.
கேஸ்டிரிடிஸ் - இரைப்பை அழற்சி என்ற வார்த்தை மக்களிடையே இன்று அதிகமாக பேசப்படுகின்றது. வயிற்றின் உள்பகுதியில் ஏற்படும் வீக்கம் இது. இந்த பாதிப்பிற்கு பல காரணங்கள் உள்ளன. கிருமி தாக்குதல், அதிக மது, அதிக வீக்க குறைவிற்கான மருந்துகள் மற்றும் அதிக ஸ்ட்ரெஸ் போன்றவை ஆகும். இதன் அறிகுறிகள் பாதிப்புக்கேற்ப சற்று மாறுபடும். என்றாலும் சில பொதுவான அறிகுறிகளாக கீழே குறிப்பிடப்பட்டவை காணப்படலாம்.
வயிற்று வலி, வயிற்றில் சங்கடம், நெஞ்செரிச்சல் உணர்வு, குறிப்பாக வயிற்று மேல் பகுதியில் காணப்படும்.
வயிற்றுப் பிரட்டல், வாந்தி போன்றவைகள் இருக்கலாம்.
பசியின்மை,உப்பிசம், வயிற்றில் அதிகவாயு, அடிக்கடி ஏப்பம் இருக்கலாம்.
அஜீரணம், செரிமானம் இன்மை, வயிற்றின் மேல் பகுதியில் வலி இருக்கலாம்.
கருப்பு நிற கழிவு வெளிப்போக்கு இருக்கலாம்.
இந்த அறிகுறிகள் காணப்படும் பொழுது மருத்துவரை அணுகுவது நல்லது.
மருத்துவர் இதனை சில பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வார். தேவைப்படின் எண்டோஸ்கோபி கூட செய்யப்படும்.
ஆன்ட்டிபயாட்டிக்ஸ், அசிடிடி தவிர்க்கும் மருந்துகள், வாழ்க்கை முறை மாறுதல்கள், ஸ்ட்ரெஸ் கட்டுப்பாடு என பன்முக சிகிச்சைகள் தேவைப்படும்.
பொதுவில் ஸ்ட்ரெஸ் பாதிப்பினை குறைக்க ஆழ் மூச்சு பயிற்சியினை முறையாக கற்று கடைபிடிக்க வேண்டும்.
தியானம் அவசியம். யோகா அன்றாடம் செய்ய வேண்டும். கண்மூடி நல்ல இயற்கை சூழ்நிலைகளை மனக்கண்ணால் காண்பது அமைதிப்படுத்தும்.
கட்டுப்படுத்த முடியாத அளவு ஸ்ட்ரெஸ் இருந்தால் தலைவலி, வயிற்று வலி, தசைகள் இறுகியது போல் இருக்கும். எதிலும் முறையாக கவனம் செலுத்த முடியாது. எதையும் முழுமையாய் திறமையாய் செய்ய இயலாது. தூக்கம் சரியாக வராது. இந்த மாதிரியான நேரங்களில் ஒரு மனநல மருத்துவரை காண்பது நல்லது.
கேஸ்டிரிடிஸ் பிரச்சினையினை முறையாக கவனிக்காவிட்டால் பெப்டிக் அல்சர் பாதிப்பு ஏற்படும். நீண்ட நாள் வயிறு வீக்கம், வயிற்றில், சிறு குடலில் புண்களை ஏற்படுத்தலாம்.
நீண்ட கால கேஸ்டிரிடிஸ் பாதிப்பாக மாறலாம். சில ஆபத்தான நோய்களின் பாதிப்பினையும் உருவாக்கலாம். உள்ளே ரத்தக் கசிவு ஏற்படுவதன் காரணமாக ரத்த சோகை ஏற்படலாம். சத்துக்கள் முழுமையாக உரியப்படாத நிலைமை ஏற்படலாம். ஆக எதனையுமே ஆரம்ப கால அறிகுறிகள் தெரியும்போது மருத்துவ கவனம் கொடுத்தால் பல பிரச்சினைகள் தீரும்.
இந்த கேஸ்டிரிடிஸ் பிரச்சினையினை தவிர்க்கும் முறையாக புகை, மது, மிக காரமான உணவுகள் இவற்றினை தவிர்க்க வேண்டும். வலி நிவாரண மாத்திரைகளை அளவாக பயன்படுத்த வேண்டும். கிருமி தாக்குதலுக்கு சிகிச்சை பெற வேண்டும். காபி, டீ போன்றவற்றை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு முறையில் மருத்துவர் ஆலோசனையினை பின்பற்ற வேண்டும்.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கேஸ்டிரிடிஸ் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதே போல் அதிக கேஸ்டி ரிடிஸ் பாதிப்பு உடையவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.
கேஸ்டிரிடிஸ் பிரச்சினை உள்ளவர்கள் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. கனமான உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. எளிதில் செரிக்க கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். சமைத்த காய்கறிகள், பழங்கள் இவற்றினை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அசிடிடி - கேஸ்டிரிடிஸ் இரண்டும் ஒன்று அல்ல. ஆனால் இருவரும் உறவுக்காரர்கள். அசிடிடி என்று சொல்வது நெஞ்செரிச்சல், அஜீரணம், வயிற்றில் சங்கடம் போன்றவை இருக்கும். அதிகம் உண்பது, அதிகம் காரசார மசாலா உணவுகளை சேர்த்துக் கொள்வது, அதிக கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது ஆகிய காரணங்களால் ஏற்படும்.
வெள்ளரிகாய்:
* 95 சதவீதம் சத்து கொண்டது.
* ஜீரணத்திற்கு உதவும்
* நச்சுக்களை உடலில் இருந்து நீக்குகின்றது.
* உடலில் அதிக கொழுப்பு சத்தினை குறைக்கக் கூடியது.
* உடல் உஷ்ணத்தினை சீராக வைக்கும்.
* மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
* கொளுத்தும் வெயிலில் வெளியில் சென்று வந்தால் ஓரிரு வில்லைகளை எடுத்து முகம், கழுத்து, கைகளில் தேய்த்து விடுங்கள்.
* ஈறு பாதிப்புகளை ஆற்றும்.
* ரத்த அழுத்தம் சீராய் இருக்கும்.
* வைட்டமின் ஏ, பி, பி6, சி.டி. மற்றும் ப்போலேட், கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் சத்து கொண்டது. இந்த கோடையில் தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடலாமே.
* கேஸ்டிரிடிஸ் என்பது வயிற்றின் உட்புற பகுதியில் வீக்கம் ஏற்படுத்துவது ஆகும். இதற்கான காரணங்களை முன் பகுதியில் பார்த்தோம்.
* எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவர் ஆலோசனை பெறுவதே நல்லது.
* ஆசிட்ரிப்ளக்ஸ்: இதனை இரையக உண் குழலியம் பின்னோட்ட நோய் என்கின்றனர். நாம் ஆசிட் ரிப்ளக்ஸ் என்றே இங்கு குறிப்பிடுவோம். இந்த தாக்குதலால் இரைப்பையில் இருந்து உணவு, அமிலம் இவை மேல் நோக்கி உணவ குழாய்க்கு தள்ளப்படுகின்றது. இதில் உள்ள அமிலத்தால் உணவுக் குழாய் பாதிக்கப்படுகின்றது. நெஞ்செரிச்சல், நெஞ்சு வலி போன்றவை ஏற்படும்.
* புகை பிடித்தல், கர்ப்பகாலம், அதிக உடல் பருமன், சில மருந்துகள், கார சார எண்ணை மசாலா உணவுகள் இவை ஆசிட் ரிப்ளக்ஸ் ஏற்பட காரணம் ஆகின்றன. மேலும் ஆசிட் ரிப்ளக்ஸ் தொடர்ந்து இருக்கும் போது பற்களில் கூச்சம், தொண்டை பாதிப்பு, மூச்சுத் திணறல், தீரா இருமல், குரலின் தன்மையில் மாற்றம் ஆகியவை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.
* நெஞ்சின் நடுவில் ஏற்படும் நெஞ்செரிச்சலை முக்கிய அறிகுறியாக 'ஆசிட்ரிப்ளக்ஸ்' தாக்குதலாக பார்க்கப்படுகிறது.
* அடிக்கடி விக்கல் அல்லது இருமல் ஏற்படுகின்றதா?
* வயிற்றில் உப்பிசம்
* வாய் துர்நாற்றம்
இவையும் 'ஆசிட்ரிப்ளக்ஸ்' பாதிப்பின் அறிகுறிகளைக் காட்டும். மது, தக்காளி, சாக்லேட் போன்றவையும் அதிக ஸ்ட்ரெஸ் பாதிப்பும் கூட இந்நோய்க்கு காரணம் ஆகின்றன. இப்பாதிப்பு உடையவர்கள் வாழ்க்கை முறை மாற்றமாக
* சிறிய அளவு உணவாக அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.
* இரவில் தலையணையினை சற்று உயர்த்தி படுத்துக் கொள்ளலாம்.
* எடையினை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதிக ஸ்டிரெஸ் இல்லாது ரிலாக்சாக இருக்க வேண்டும்.
தவிர்ப்பு முறையாக
* மது, புகை அடியோடு தவிர்க்கப்பட வேண்டும்.
* இரவு உறங்குவதற்கு 3 முதல் 4 மணி நேரம் முன்னதாகவே இரவு உணவினை முடித்து விட வேண்டும்.
* இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது.
* டாக்டர் தரும் மருந்தினை முறையாய் உட்கொள்ள வேண்டும். இன்று ஆசிட்ரிப்ளக்ஸ் மக்களிடையே அதிகமாக காணப்படுகின்றது. இதனை தவிர்க்க தகுந்த வழி முறைகளை பின்பற்ற வேண்டும்.
* தினமும் கொஞ்சம் சூரிய ஒளி உடலில் படட்டும்.
* தினமும் 20 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்யுங்கள்.
* தினம் 8 அல்லது 10 கிளாஸ் நீர் அருந்துங்கள். * வெளி உணவை அடியோடு தவிர்த்து விடுங்கள். * சோடா, சர்க்கரை வேண்டாமே. * பழங்கள், காய்கறி இவைகள் அவசியம். * ஒவ்வொரு வேளை உணவிலும் புரதம் உள்ளதா? என கவனியுங்கள்.
* மனதினை ரிலாக்ஸ் ஆக வைத்திருங்கள்.
அப்புறம் என்ன உடம்பில் நோய் ஓடி விடுமே!






