என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தலைவலியின் வகைகளும்-தீர்வுகளும்: கமலி ஸ்ரீபால்
    X

    தலைவலியின் வகைகளும்-தீர்வுகளும்: கமலி ஸ்ரீபால்

    • உலக தலைவலி ஆய்வு மையம் தலைவலிக்காக மட்டும் 150 காரணங்களை கூறுகின்றது.
    • தாங்க முடியாத தலைவலியினைத் தருவது. சில நேரங்களில் எப்படி ஏற்படுகின்றது என்றே தெரியாது.

    இன்று "தலைவலி" பாதிப்பினைப் பற்றி கூறுபவர்கள் உலகெங்கிலும் இருக்கின்றார்கள். இதென்ன அதிசயம்? சாதாரண விஷயம் தானே. வீட்டிலும் தலைவலிதான். ஆபீசிலும் தலைவலிதான் என்று நாம் அலுத்துக் கொள்ளலாம். மருத்துவ ரீதியாக 18 முதல் 66 வயது வரை உள்ளவர்கள் தலைவலியால் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஒரு ஆய்வு கூறுகின்றது.

    உலக தலைவலி ஆய்வு மையம் தலைவலிக்காக மட்டும் 150 காரணங்களை கூறுகின்றது. சில பொதுவான காரணங்களாக சொல்லப்படுவதை பார்ப்போம்.

    * டென்ஷன் தலைவலி: ரொம்ப கவலை, அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பது, அலுவலகத்தில் பாஸ் கத்துவது, வீட்டில் தொல்லை இப்படி அடுக்கடுக்கான பல காரணங்களைக் கூறலாம். இவை அனைத்திற்கும் நம் மனச்சோர்வு தான் காரணம். ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும் போது சாதாரணமானது முதல் மண்டை உடைப்பது போல் வரை தலைவலி இருக்கும். கண்ணை சுற்றியும் வலி இருக்கும்.

    * கிளஸ்டர் தலைவலி: தாங்க முடியாத தலைவலியினைத் தருவது. சில நேரங்களில் எப்படி ஏற்படுகின்றது என்றே தெரியாது. வரும் சில நேரங்களில் ஒன்றுமே இராது. வந்தால் நீண்ட நேரம் இருக்கும். வருவதற்கு முன்னால் வெளிச்சம் ஒன்று பளிச்சென்று வருவது போல் தெரியும். ஒரு கண்ணுக்குப் பின்பாகவோ அல்லது முகத்தின் ஒரு பக்கமாகவோ வலி இருக்கும். வலிக்கும் பக்கம் வீக்க மாக, சிகப்பாக, வியர்வையாக இருக்கும்.

    * மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி: 35 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் அதிகம் இதை அனுபவிப்பதாக கூறுவார்கள். பொதுவில் இது இளம் பருவத்திேலயே ஆரம்பித்து விடும். ஆழ் மூளையின் செயல்பாட்டால் வலி ஏற்படும். இதனால் வீக்கம், வலி உருவாகுகின்றன. சுமாரான பாதிப்பு முதல் அதிக வலி பாதிப்பினைக் கொடுக்கும். தலையின் ஒரு பக்கத்தில் தான் வலியினை ஏற்படுத்தும். சில மணி நேரம் முதல் 2 முதல் 3 நாட்கள் வரையில் கூட இருக்கும். சிலருக்கு வலியுடன் வயிற்றுப் பிரட்டல், வாந்தி, வெளிச்சம் பார்த்தால் கண் கூசுதல், சிறிது சத்தம் கூட தாங்க முடியாத அளவுக்கு இருக்கும். சிலருக்கு கால்கள் கூட மரத்து போவது போல இருக்கும்.

    * அடுத்த பிரிவுகளில் பார்க்கும் போது- அலர்ஜி தலைவலி இருக்கலாம். தூசு, சீசன் மாறுதல், புகை என இதற்கான காரணம் அவரவரது ஒவ்வாமையை பொறுத்து இருக்கலாம். மூக்கடைப்பு, கண்களில் நீர் வடிதல், தலைவலி என இருக்கும். அலர்ஜிக்கான மருந்தினை சிகிச்சை மூலம் பெறும் போது இது சரியாகி விடும்.

    * சைனஸ் தலைவலி- மூக்கில் எரிச்சலுடன் கூடிய வலி, மூக்கினை சுற்றிய பகுதியிலும் இவ்வாறு வலி இருத்தல், கிருமி பாதிப்பு என இருக்கும். பலரும் இவ்வாறான பாதிப்பில் சிகிச்சை பெறுவதனை அறிந்திருப்போம்.

    * சிலருக்கு காபி குடிக்கவில்லை என்றால் தலைவலி ஏற்படும். காபி அதாவது காபின் கொண்ட எதையும் நிறுத்த முயற்சிக்கும் போது தலைவலி ஏற்படும். இது பழக்கத்தின் காரணமாக ஏற்படுவது. இதனை எளிதில் முயன்று சரி செய்து கொள்ள முடியும்.

    * மாத விடாய் காலங்களில் ஹார்மோன்கள் காரணமாக தலைவலி ஏற்படலாம். கர்ப்ப காலம், கருத்தடை மாத்திரை உபயோகிக்கும் காலம் இவற்றினாலும் ஏற்படலாம்.

    * Hemicrania Continua- இந்த வகையானது ஒரு வித்தியாசமான தலைவலி- ஒரு பக்க தலை, முகம் இவற்றில் ஏற்படும். அதிக வலி இருக்கும். அன்றாடம் இருக்கும். ஸ்டெராய்டு இல்லாத வலி வீக்க நிவாரண மருந்துகளை மருத்துவர் பரிசோதனைக்குப் பிறகு தருவார்.

    * உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் தலைவலி- தலைக்கு 'பேண்ட்' போட்டாற்போல் வலி இருக்கும். காலையில் சற்று அதிகமாக இருக்கும். நடக்க, நடக்க மெதுவாய் குறையும். ரத்த அழுத்தத்தினை உடனடியாக பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    * தலைவலி என்ற உடன் ஒரு மாத்திரையினை தானே உடனே போட்டுக் கொள்வது பலரின் வழக்கம். மருந்தின் நேரம் முடிந்தவுடன் மறுபடியும் தலைவலி ஆரம்பிக்கும். அதிக வலி மாத்திரைகள் எடுத்துக் கொள்வது நல்லதல்ல. மருத்துவ பரிசோதனை சிறந்த தீர்வு அளிக்கும்.

    * தொடர்ந்து நீண்ட நேரம் கடுமையான வேலை செய்தாலும் தலை வலி ஏற்படும். * காது, கழுத்து, நெற்றி, தலை இவற்றில் அடிபட்டாலும் தலைவலி ஏற்படும். * தண்டு வட பிரச்சினைகளும் தலை வலியினை கண்டிப்பாய் ஏற்படுத்தும். * மது அதிகம் அருந்துபவர்களுக்கு ரத்த குழாய்கள் மூளை யானது தளர்வடைவதால் தலைவலி ஏற்படும். * பசி அதிகமாகும் போது தசைகள் டென்ஷன் அடைவதாலும் சர்க்கரை அளவு ரத்தத்தில் குறைவதாலும் தலைவலி ஏற்படும். உணவு உண்ட பின் சரியாகி விடும். * வாய் திறக்கும் போது தாடை காது இணை பக்கத்தில் 'கிளிக்' சத்தத்துடன் தலைவலி ஏற்படலாம். ஸ்ட்ரெஸ் ஒரு காரணம் என்றாலும் மருத்துவ உதவி தேவை.

    * காய்ச்சல் காரணமாக வீக்கங்கள் ஏற்படும். தலையில் உள்ள ரத்த குழாய்களில் ஏற்படும் வீக்கம் காரணமாக தலைவலி ஏற்படலாம். வலி நிவாரண மாத்திரைகள், ஆன்ட்டி பயாடிக் மாத்திரைகள், மஞ்சள் சேர்த்த பால் இவற்றின் மூலம் நிவாரணம் பெறலாம். * மூட்டு வலி காரணமாகவும் வீக்கங்கள் ஏற்படுகின்றன. இதனாலும் தலைவலி ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

    சில பிரிவு தலைவலிகள் பற்றி இங்கு கூறுவதினை தவிர்த்துள்ளோம். காரணம். அவற்றுக்கு நேரடி உடனடியான மருத்துவர் உதவி தேவை.

    தலைவலி என்பது மருத்துவர் கவனம் பெற வேண்டிய ஒன்று என்பதனை வலியுறுத்துவே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

    * டென்ஷன் தலைவலிக்கு ஐஸ் ஒத்தடம் சில நிமிடங்கள் கொடுக்கலாம். * கிளஸ்டர் பிரிவு தலைவலிக்கு ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி அவசியம். * ஒற்றை தலைவலிக்கு கூட ஐஸ்பேக் ஒத்தடம் கொடுக்கலாம். * அலர்ஜி வகை தலைவலிக்கு அலர்ஜிக்கான மருந்து அவசியம். மேலும் நன்கு தண்ணீர் (2 லிட்டர் அளவு) குடிக்க வேண்டும்.

    * காபின் இல்லாத போது ஏற்படும் தலைவலிக்கு இஞ்சி டீ குடிக்கலாம். * சைனஸ் பாதிப்பினால் ஏற்படும் தலைவலிக்கு மருந்து சேர்த்த நீராவி பிடிக்கலாம். * மாதவிடாய் கால தலைவலிக்கு இஞ்சி டீ குடிக்கலாம். ஐஸ், சுடுநீர் ஒத்தடம் கொடுக்கலாம். * உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் தலை வலிக்கு முறையான மருந்து தேவை. தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் தியானம் செய்யுங்கள். * முறையான தூக்கம் இல்லாமல் ஏற்படும் தலைவலிக்கு கிரீன் டீ, ஹெர்பல் டீ எடுத்துக் கொள்ளலாம்.

    * விபத்துகளின் காரணமாக ஏற்படும் தலைவலியால் தூக்கம் கெடலாம். சிகிச்சை கூடவே தியான முறை பெரிதும் உதவும். * அதிக கன உழைப்பு காரணமாக ஏற்படும் தலைவலிக்கு வெதுவெதுப்பான சூப் உதவலாம்.

    * தண்டு வட பாதிப்பினால் தலை சுற்றல், வலிப்பு, காதில் சத்தம் போன்றவை ஏற்படலாம். இவர்களுக்கு அதிக அசைவுகள் இல்லாத ஓய்வும், சிகிச்சையும் தேவைப்படும். * அதிக மது குடித்து ஏற்படும் பாதிப்பு இருப்பவர் கிரீன் டீ, இளநீர் அருந்தலாம். * தாடை அசைவில் வலி, முக வலி இருப்பவர்கள் மருத்துவ சிகிச்சையுடன் மெல்லிய உணவு உண்பதும், ஐஸ் பேக் வைத்தும் கொள்ளலாம். * மூட்டு வலிக்கு மருத்துவ சிகிச்சையுடன் மசாஜ், யோகா பயன் தரும்.

    * இந்த கட்டுரையில் உலக தலைவலி ஆய்வு மைய ஆய்வுகளின்படி கூறிய கருத்துகளை பகிர்ந்துள்ளோம். தலைவலிக்கு மட்டுமே 150 பிரிவுகளை அவர்கள் வகை படுத்தி இருந்தாலும் குறிப்பிட்ட சில பிரிவுகள் இங்கு கூறப்பட்டுள்ளன. வாழ்நாள் முழுவதுமே ஏதோ ஒரு உடல் பாதிப்பு வலியோடு வாழ்வது என்ற நிலை உருவாகி வருவதால், முறையான கவனம் கொடுத்தால் வலியற்ற வாழ்வு வாழலாம்' என்பதே ஆய்வுகளின் வழி காட்டுதலாக உள்ளது. நாமும் பின்பற்றுவோமே.

    மூளையை பாதிக்கும் சில பழக்கங்கள்:

    * சிலர் சூரிய ஒளியினை பார்க்காமல் நீருக்குள்ளேயே அடைந்து இருப்பார்கள். இன்னமும் சொல்லப் போனால் இருட்டிலேயே இருப்பார்கள். * எப்போதும் அறிவுப்பூர்வமான செய்திகளை கேட்பார்கள், பேசுவார்கள். * Ear Phone உபயோகப் படுத்தினாலும் மிக அதிக சப்தமாக இசை கேட்பார் கள். * மிக அதிகமாக புகை பிடித்துக் கொண்டே இருப்பார்கள்.

    * சமூகம், உறவு, நட்பு இவற்றில் இருந்து ஒதுங்கி இருப்பார்கள். * அநேகமாக காலை உணவினை எடுத்துக் கொள்ளவே மாட்டார்கள். * தூக்கம் மிகக் குறைவாக இருக்கும். அதுவும் முறையாக இருக்காது. * அதிக இனிப்புகளை எடுத்துக் கொள்வார்கள். * அதிக நேரம் செல்போன், கம்ப்யூட்டர், டி.வி. என்று இருப்பார்கள். இவை அனைத்தும் கண்டிப்பாய் மூளையின் செயல்பாட்டினை குறைக்கும். மனச் சோர்வு, மன இறுக்கம், மன அழுத்தம் இவற்றினை ஏற்படுத்தி விடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    * இத்தகையோர் ரகசியமாக கீழ்கண்டவாறு இருக்கலாம். அவ்வாறு இருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம். * வேலைகள் அனைத்தையும் தவிர்ப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு சக்தி இல்லை. காரணம் அவர்கள் தன் சக்தியினை கடும் முயற்சி செய்து மன இறுக்கத்தில் இருந்து வெளி வரவே செலவழித்து விடுகின்றனர்.

    * தன் மன மாற்றத்திற்காக அதிக நேரம் முயற்சி செய்து நேரத்தினை செலவழிப்பர்.

    * இவர்கள் தினமும் 4 முதல் 5 வால்நட் சாப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றது. பல சத்துக்கான விஷயங்கள் இதில் கொட்டிக் கிடப்ப தாலேயே பாதாம், பிஸ்தா, வேர்கடலை இப்படி சத்துகள் நிரம்பிய உணவுகள் இருந்தாலும் வால் நட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இதில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு வைட்டமின் உள்பட பல்வேறு சத்துகள் உள்ளன எனக் கூறிக் கொண்டேசெல்லலாம். * வால்நட் கொட்டைக்கு ஸ்ட்ரெஸ் பாதிப்பினை குறைக்கும் சக்தி உண்டு. இதனாலேயே இது மன நலத்திற்கு சிறந்த உணவாக உட்கொள்ளப்படுகின்றது. * வயது கூடும் போது மூளையில் ஏற்படும் தேய்மானத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றது.

    * இருதயம் பலப்படுகின்றது. தினமும் 2 முதல் 3 வரையில் வால்நட் சாப்பிடுவோேம. * அதே போல காலையில் இருந்து ஒரே இடத்தில் அசையாமல் புளி மூட்டை போல் அமர்ந்திருந்தாலும் மூளை பலம் இழந்து விடும். * மனச்சோர்வு, அழுத்தம் இவற்றினை சில செயல்களால் சிலர் தானே வரவழைத்துக் கொள்வர். சில உறவுகளை நாம் ஏற்படுத்திக் கொள்ளும் போது அதில் எதிராளி முழு ஈடுபாட்டினை தரவில்லை என்றால் தொடர்ந்து மனக்காயங்களோடு இருப்பதை விட அந்த நலிந்த உறவினை, பாதுகாப்பு இல்லாத உறவினை உடனே நீக்கி விட வேண்டும். இதில் நேரம் செலவழிப்பது வீணே.

    * சிலர் தனக்குத் தானே விஷமாக இருப்பார்கள். தன்னை புறக்கணிப்பார்கள். தனக்கு அடிப்படை தேவைகள் இல்லாமல் இருந்து நான் பிறருக்காக தேய்ந்து உருகி வாழ்கிறேன் என்பார்கள். இத்தகை யோரிடம் மனித உறவுகள் நிலைக்காது. இங்கு நான் படிக்கும் போது யதார்த்தமான மனிதர்களையும் மனதில் கொண்டு பார்க்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தன் மீதான அக்கறை இருக்க வேண்டும்.

    * மிக அதிகமாக குடைந்து குடைந்து சிந்திப்பார்கள். ஒன்றினை நினைவில் கொள்ள வேண்டும். 90 சதவீத பிரச்சினைகள் அவர்களின் அதிக எண்ணங்களால் மட்டுமே உருவாகின்றது. மிகக் குறைந்த அளவு பிரச்சினையே வெளியில் இருந்து வருகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    * பல பிரச்சினைகளை காலமே ஆற்றி விடுகின்றது. அதனால் பழைய பிரச்சினைகளுக்குள் போகவே வேண்டாம். * இந்த நொடியில் முழுமையாய் வாழ வேண்டும். * ரொம்ப கோபம் வந்து கடுமையாய் கத்துபவரா? பேச ஆரம்பிப்பதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் சற்று நிதானமாய் குடித்துப் பாருங்கள்.

    * சூரிய ஒளியில் சிறிது நேரம் இருந்து பழகுங்கள். மன நலம் கூடும். உறுதியான எலும்பு கிடைக்கும். புற்று நோயை தவிர்க்க உதுவும். நல்ல தூக்கம் வரும். சக்தி கூடும். கண் ஆரோக்கியம் கூடும். இப்படி ஏராளமான நன்மைகள் செலவில்லாமல் கிடைக்கும். * வறட்டு கவுரவம் பார்க்க வேண்டாம். முரட்டுத் தனமான போக்கு பேச்சு ஒருவரை ஆழ் மனதில் நோயாளி ஆக்கி விடும். * தரம் இல்லாத, ஆக்கப்பூர்வ சிந்தனை இல்லாத மக்களிடம் இருந்து ஓட்டம் பிடியுங்கள். * சுய கட்டுப்பாடு இருப்பவர்களுக்கே சுய மரியாதை இருக்கும் என்பதனை உணருங்கள்.

    * இவை அனைத்தும் ஒரு நொடி கூட தவறாது செய்தால்தான் வெற்றி. எப்பொழுதாவது ஒரு முறை செயல்பட்டு உடனே வெற்றி காண்பது என்பது இயலாத செயல். * அது போல் ஒருநாள், ஒரு செயல் சரியாக நடைபெறவில்லை என்றால் வாழ்வே போய் விட்டதாக நினைக்கக் கூடாது.

    * காலையில் எழுந்து பல் தேய்த்தவுடன் பலருக்கு ஒரு கையில் காபி ஒரு கையில் பேப்பர் என்று இருக்க வேண்டும். சிலருக்கு டீ வேண்டும். சிலருக்கு இத்துடன் பீடி, சிகரெட் வேண்டும். ஆக தூங்கி எழுந்தவுடன் முதல் வேலையாக முனைந்து நம் உடலினை கெடுத்துக் கொள்கின்றனர். இதுவே காலப் போக்கில் மூளையின் செயல்பாட்டுத் திறனை யும் குறைத்து விடும். காலையில் முதலில் சுத்த மான நீர் குடியுங்கள். உடல், மனம் இரண்டும் பாதுகாக்கப்படும். செய்வோமே.

    Next Story
    ×