என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

'சைபர் செக்யூரிட்டி' படிப்புகள்
- பிளஸ் 2 படிப்பிற்கு பிறகு, மேற்படிப்பாக படிக்கும் வகையில் பல்வேறு சைபர் செக்யூரிட்டி படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன .
- ஆன்லைன் மூலம் இலவசமாக பல்வேறு சைபர் செக்யூரிட்டி படிப்புகளை படிப்பதற்கு அருமையான வாய்ப்புகள் இருக்கிறது.
இப்போதெல்லாம் "சைபர் செக்யூரிட்டி" (Cyber Security)பற்றிய படிப்புகள் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றன. இந்த படிப்புகள் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளும், சமூகத்தில் சிறந்த மரியாதையும் இருப்பதால், இந்த படிப்புகளை பற்றிய விழிப்புணர்வு இளைய தலைமுறையினருக்கு நிச்சயம் தேவை.
சைபர் செக்யூரிட்டி என்றால் என்ன?
கம்ப்யூட்டர்கள், தகவல்கள், இணைய தளங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், மொபைல் சாதனங்கள் மற்றும் இன்டர்நெட்டுக்கு பயன்படும் சர்வர்கள் போன்றவற்றை பழுதாக்கி, தீங்கு விளைவிக்கும் நோக்கத்தோடு உலா வரும் வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கும் முறையை "சைபர் செக்யூரிட்டி" என அழைப்பார்கள்.
இதனை – "எலக்ட்ரானிக் டேட்டா செக்யூரிட்டி" (Electronic Data Security) என்றும், "இன்பர்மேஷன் டெக்னாலஜி புரொட்டெக்சன்" (Information Technology Protection) என்றும் குறிப்பிடுவது உண்டு.
"சைபர் செக்யூரிட்டி" என்னும் வார்த்தைகள் பல்வேறு சூழல்களுக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக, நெட்வொர்க் செக்யூரிட்டி (Network Security), டேட்டா செக்யூரிட்டி (Data Security ) ,ரெக்கவரி பிளான்ஸ் அண்ட் பிசினஸ் கண்டினியுட்டி (Recovery Plans & Business Continuity), செக்யூரிட்டி டெஸ்டிங் ( Security Testing), செக்யூரிட்டி புரொசீஜர்ஸ் (Security Procedures), எண்ட் யூசர்ஸ் லேர்னிங் (End-User Learning) என்பவை சைபர் செக்யூரிட்டியின் சில முக்கிய பிரிவுகளாகும்.
கம்ப்யூட்டர் தொடர்புடைய பல்வேறு கருவிகளை தாக்கும் வைரஸ்களிடமிருந்து பாதுகாக்க பல்வேறு புதிய சைபர் செக்யூரிட்டி பிரிவுகளும் அவ்வப்போது தேவைக்கு ஏற்ப அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
பிளஸ் 2 படித்த பிறகு...
பிளஸ் 2 படிப்பிற்கு பிறகு, மேற்படிப்பாக படிக்கும் வகையில் பல்வேறு சைபர் செக்யூரிட்டி படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன .
குறிப்பாக , சைபர் செக்யூரிட்டி படிப்பை போலவே பல்வேறு விதமான பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பாடங்களை உள்ளடக்கிய புதிய படிப்புகளும் அவ்வப்போது அறிமுகப் படுத்தப்படுகின்றன. அந்தப் பாடங்களில் சில..
1. செக்யூரிட்டி ஆர்க்கிடெக்சர் (Security Architecture)
2. நெட்வொர்க்கிங் (Networking)
3. செக்யூரிட்டி சிஸ்டம் (Security System)
4. அப்ளிகேஷன் செக்யூரிட்டி (Application Security)
5. சைபர் டிபன்ஸ் (Cyber Defense)
6. இன்பர்மேஷன் செக்யூரிட்டி (Information Security)
7.டேட்டா செக்யூரிட்டி அண்ட் கம்யூனிகேஷன் (Data Security and Communication)
8. என்கிரிப்ஷன் அண்ட் கிரிப்டோகிராபி (Encryption and Cryptography)
9. ஸ்ட்ரிங் அண்ட் டேட்டா மனிபுலேஷன் (String and Data Manipulation)
10. டிஜிட்டல் போரன்சிக். (Digital Forensics)
11. மால்வேர் அனாலிசிஸ். (Malware Analysis)
பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏற்ற சில சைபர் செக்யூரிட்டி படிப்புகள்.
1. பி.எஸ்.சி போரன்சிக் கம்ப்யூட்டிங் அண்ட் செக்யூரிட்டி. (B.Sc Forensic Computing and Security)
2. பி. எஸ். சி .டிஜிட்டல் செக்யூரிட்டி அண்ட் போரான்சிக் ( B.Sc Digital Security and Forensics)
3. பி. சி. ஏ ஹானர்ஸ் இன் சைபர் செக்யூரிட்டி (B.C.A (Hons) in Cyber Security)
4. பி சி. ஏ. வித் மைக்ரோசாப்ட் கிளவுட் கம்ப்யூட்டிங் அண்ட் சைபர் செக்யூரிட்டி. (B.C.A .with Microsoft Cloud Computing and Cyber Security)
5. பி. டெக் சைபர் செக்யூரிட்டி( B.Tech Cyber Security)
6. பி .டெக் சிஎஸ்சி சைபர் செக்யூரிட்டி ( B.Tech.CSC Cyber Security)
7. பி.எஸ்.சி சைபர் செக்யூரிட்டி (( B.SC Cyber Security)
8. பி.எஸ்.சி சைபர் செக்யூரிட்டி அண்ட் டிஜிட்டல் போரன்சிக் (ஹானர்ஸ்) (B.Sc Cyber Security and Forensic (Honours)
9. பி. பி. ஏ சைபர் செக்யூரிட்டி ( B.B.A Cyber Security)
10. பி.காம் சைபர் கிரைம்ஸ் அண்ட் லாஸ்( B.Com Cyber Crimes and Laws)
11. பி.காம் இன் போரன்சிக் அக்கவுண்டிங்(B.Com in Forensic Accounting)
12. பி.காம் இன் பிராடு டிட்டடெக்சன் (B.Com in Fraud Detection)
13. பி.எஸ்சி டிஜிட்டல் செக்யூரிட்டி (ஹானர்ஸ்) (B.Sc Degital Security (Hons)
14. பி.எஸ்.சி கம்ப்யூட்டர் போரன்சிக் (ஹானர்ஸ்) ( B.Sc Computer Forensic (Hons)
15. பி .எஸ். சி சைபர் செக்யூரிட்டி நெட்வொர்க் (ஹானர்ஸ்) (B.Sc Cyber Security
Net works (Hons)
16. பி ஏ சைபர் செக்யூரிட்டி. ( B.A.Cyber Security )
சைபர் செக்யூரிட்டி சான்றிதழ் படிப்புகள்
சைபர் செக்யூரிட்டி சான்றிதழ் படிப்புகளாக பல்வேறு படிப்புகள் பல கல்வி நிறுவனங்களில் நடத்தப்படுகின்றன.
இந்தியா முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் நடத்தும் இந்த படிப்புகளில், பொறியியல் சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பு முடித்தவர்களும், பிளஸ் டூ முடித்தவர்களும், ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்களும் சேர்ந்து படிக்கலாம்.
அவற்றுள் சில முக்கியமான படிப்புகள் பற்றிய விபரங்கள்
1. Advanced Certificate Programme in Cyber Security
2. Certificate in Cyber Security
3. Cyber Security Analyst
4. IT Fundamentals for Cyber Security Specialization
5. Cybersecurity Specialization
6. Introduction to CyberSecurity
7. Introduction to Cyber Security Tools and Cyber Attacks
8. Advanced Cyber Security Training Network Security
9. Cyber Security Certification
11. eMaster in Cyber Security
12. Cyber Security Course
13. Executive Postgraduate Programme in Software Development Specialization in Cyber Security
14. Postgraduate Certification in Cyber Security and Ethical Hacking
15. Postgraduate Programme in Cyber Security
16. Advanced Certification Program in Cyber Security and Cyber Defence
18. Offensive Cyber Security Engineer Training
19. Cyber Security Operations Cisco
20. Cyber Security Basics: A Hands-on Approach
இலவச ஆன்லைன் சைபர் செக்யூரிட்டி படிப்புகள்
ஆன்லைன் மூலம் இலவசமாக பல்வேறு சைபர் செக்யூரிட்டி படிப்புகளை படிப்பதற்கு அருமையான வாய்ப்புகள் இருக்கிறது. இந்த வாய்ப்புகளை பணியில் இருப்பவர்களும் படித்துக் கொண்டிருப்பவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக காவல்துறை கம்ப்யூட்டர் துறை போன்ற முக்கியமான துறைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு இந்த இலவச ஆன்லைன் சைபர் செக்யூரிட்டி படிப்புகள் மிகவும் உறுதுணையாக அமையும். இந்த சான்றிதழ் படிப்புகளை கூகுள், சுயம் ,ஐ.பி.எம், ஐ.ஐ.டி போன்ற பல நிறுவனங்கள் இலவசமாக நடத்துகின்றன.
பத்தாம் வகுப்பில் வெற்றி பெற்றவர்கள், பிளஸ் டூ முடித்தவர்கள், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் இந்த படிப்புகளில் சேர்த்து படிக்கலாம்.
குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் இந்த படிப்பில் சேர கண்டிப்பாக தேவை.
இந்த படிப்பில் சேர வயது வரம்பு ஏதுமில்லை. எந்த வயதினரும் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
அவற்றுள் சில முக்கியமான படிப்புகள் பற்றிய விபரங்கள்:
1.Cyber Security Course for Beginners
2.Cryptography
3.Unlocking Information Security I: From Cryptography to Buffer Overflows
4.Software Security
5.Cyber Security
6.Introduction to Cybersecurity
7. Applied Cryptography
8.Building a Cybersecurity : Cybersecurity – The Essential Challenge for Digital Transformation -openSAP
9.The Art of Hacking Humans: Intro to Social Engineering Information Security Secure Systems Engineering
10. Cybersecurity Basics
11. Cyber Security Foundations: Common Malware Attacks and Defense Strategies
EC Council, FutureLearn
சைபர் செக்யூரிட்டி படிப்பு முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள்
சைபர் செக்யூரிட்டி படிப்பை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன.
அவற்றுள் சில
1. Network Security Engineer
2. Cyber Security Analyst
3. Security Architect
4. Cyber Security Manager
5. Chief Information Security Officer (CISO)
6. Information Security Manager
7. Cybersecurity Engineer
8. Application Security Engineer
9. Ethical Hackers
10. Incident Manager
11. Cybersecurity Consultant
12. Cloud Security Engineer
தொடர்புக்கு: nellaikavinesan25@gmail.com






