என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இதயம் ஒரு கோவில்: இதய நோய் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?
    X

    இதயம் ஒரு கோவில்: இதய நோய் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?

    • இதயத்தை பாதுகாக்க வேண்டிய மனிதர்கள் அனாவசியமாக அதனை கெடுத்து கொள்கிறார்கள்.
    • கெட்ட பழக்கங்கள் இதயத்திற்கு அடிமட்டத்தில் வியாதியை உண்டாக்கும்.

    உடலில் கை, கால், மூக்கு கண் என எண்ணற்ற உறுப்புகள் உள்ளன. எத்தனையோ உறுப்புகள் நமது உடலில் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் மேலாக மிக முக்கிய உறுப்பாக இருப்பது இதயம்.

    என்னிடம் யாராவது மூளை முக்கியமா, இதயம் முக்கியமா என்ற கேள்வியை கேட்டால், நான் சட்டென்று இதயம் தான் முக்கியம் என பதில் அளித்து விடுவேன்.

    ஏனென்றால் இதயம் என்பது ஒரு பம்ப் மாதிரி. நமது இதயத்திற்குள் ஒரு பம்ப் இருக்கிறது. அந்த பம்ப்பினை அழுத்தும் போது இதயத்தில் சேர்ந்து இருக்கும் ரத்தமானது நமது உடலின் அனைத்து பாகங்களுக்கும் சென்று புத்துணர்ச்சியை தந்து விடுகிறது. அதுவே ரிலாக்ஸ் பண்ணும் போது எல்லா பாகத்தில் இருந்தும் ரத்தமானது மீண்டும் இதயத்திற்கே வந்து விடுகிறது.

    மனித இதயமானது 4 அறைகளை கொண்டது. இடது ஆரிக்கிள், வலது ஆரிக்கிள், இடது வெண்ட்ரிக்கிள், வலது வெண்ட்ரிக்கிள் ஆகும். இதயத்தில் இருந்து வெளியே செல்லும் வகையில் ஒரு பெரிய குழாய் உள்ளது. அந்த குழாய் மகா பெருஞ்சிறை என அழைக்கப்படுகிறது. அதேபோன்று, இதயத்திற்கு மீண்டும் ரத்தத்தை கொண்டு வருவது மகா பெரும் தமனி.

    ரத்தம் வெளியே போவதுக்கு ஒரு குழாய், பழைய படி ரத்தம் வருவதற்கு ஒரு குழாய் என மகா பெருஞ்சிறையும், மகாப்பெரும் தமனியும் உள்ளது.

    இதயமானது நிமிடத்திற்கு 72 முறை துடிக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் தடவை நமது இதயம் துடிக்கும். இதயத்திற்கு ஆற்றல் இருப்பதால் தான் நம்மால் நடக்க முடிகிறது. இதயத்திற்கு தேவையான வலிமை தசையில் உள்ளது. உடம்பில் ரத்த ஓட்டம் இருக்க இதயத்திற்கும் வலிமை இருக்க வேண்டும்.

    இதயத்திற்கு பலம் இல்லை என்றால் அதனை பலவீனமான இதயம் என்கின்றனர். இதயம் வீங்கி விடுகிறது. நல்ல இதயம் என்பது ஒரு மூடிய கையளவு மட்டுமே கொண்டது. ஆனால் அந்த இதயத்திற்கு சோம்பேறி தனம் வந்தால் இதயம் விரிந்து விடும். விரிந்த இதயம் பலம் குறைந்து செயல் இழந்து விடும்.

    இதயத்தின் அளவு சிறியதாக இருந்தாலும், ரத்த ஓட்டத்தை ரத்த குழாய்கள் மூலம் உடல் முழுவதும் கொண்டு சேர்க்கும் அளவுக்கு இதயத்திற்கு பலம் உள்ளது. அந்த இதயத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.

    கண்ட உணவை சாப்பிடும் போது உடல் எடை கூடும். 1 கிலோ கூடினாலும் கொழுப்பானது சேர்ந்து 10 கி.மீ தூரத்துக்கு ரத்தகுழாய் அதிகமாகும். அப்படி ஆகும் போது மீண்டும் இதயம் விரிவடையும்.

    இதயத்திற்கு வலிமை இருந்தால் மட்டுமே நீங்கள் ஓட முடியும். நடக்க முடியும். உங்கள் வாழ்க்கையையும் ஓட்ட முடியும். இதயத்தை பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லவே இல்லை. இதயத்தை பாதுகாக்க வேண்டிய மனிதர்கள் அனாவசியமாக அதனை கெடுத்து கொள்கிறார்கள்.


    மூளைக்கு ரத்தம் போனால் தான் நம்மால் வேலை செய்ய முடியும். அப்படிப்பட்ட மூளைக்கே இதயம் மிக வலிமையாக இருந்தால் தான் ரத்தம் போகும். மூளை, நுரையீரல், இதயம், கல்லீரல், சிறுநீரகம், ரத்தம் ஆகிய 6-ம் மனிதனுக்கும், மனித வாழ்வுக்கும் மிக முக்கியமானது. இதில் மூளை, நுரையீரல், இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை வாழ்வாதாரத்திற்கான முக்கிய உறுப்புகளாகும்.

    முன்பெல்லாம் இதய நோய் உள்ளவர்களை அதிகம் பார்க்க முடியாது. ஆயிரத்தில் ஒருவருக்கு வரும். ஆனால் தற்போது ஆயிரத்தில் 10 பேருக்கு வருகிறது. 10 மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு வருடத்தில் 1 கோடி பேர் இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

    இதய நோய் வருவதற்கு விழிப்புணர்வு இல்லாதது தான் காரணம். கண்ட உணவுகளை உட்கொள்வது, உப்பு அதிகமாக சேர்ப்பது, எண்ணை உணவுகளை அதிகம் சாப்பிடுவது, ேகாபம், பதற்றம் போன்றவை தான் இதய நோயாக மாறுகிறது.

    கெட்ட பழக்கங்கள் இதயத்திற்கு அடிமட்டத்தில் வியாதியை உண்டாக்கும். எண்ணை பதார்த்தங்கள் அனைத்தும் ருசியாக இருக்கும். ஆனால் அவை அனைத்தும் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ வியாதியையும் சேர்த்து கொடுத்து விடுகிறது.

    கெட்டுப்போன இதயத்தை காப்பாற்றுவதை விட அது வராமல் தடுப்பதே மிக சிறந்தது. அதற்கு நாம் நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி என்றவுடன் உடலை வளைப்பது என்று நினைத்து விட வேண்டாம். தினந்தோறும் மூச்சு பயிற்சியும், நடை பயிற்சியும் செய்தாலே போதும். ஒரு நாள் முழுவதும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது மூச்சு பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

    உங்களால் முடிந்தது 5 முறையோ, 12 முறையோ மூச்சு பயிற்சியை செய்து பாருங்கள். நீங்கள் எடுக்கும் மூச்சு பயிற்சியை பொறுத்தே உங்களின் வாழ்வு 80 வயது வரையா 100 வயது வரையா என்பதை தீர்மானிக்கும். எனவே தினமும் இதுபோன்று ஒரு மணி நேரம் மூச்சு பயிற்சியை செய்து உங்களது ஆயுளை நீட்டித்து கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்பவருக்கு கண்ட உணவுகளை சாப்பிட எண்ணம் வராது. புத்தகங்கள் படிக்க ஆர்வத்தை தூண்டும்.

    பரிசோதனை வேண்டும்:

    இதய இயக்கம் குறித்து ஒவ்வொரு மனிதருக்குள்ளும் விழிப்புணர்வு இருக்க வேண்டும். சர்க்கரை வந்துவிட்டால் கூடவே இருதயத்தில் கோளாறு வந்து விடும். ரத்த அழுத்தம், கொழுப்பு இதெல்லாம் சேரும்போது பந்தயத்து குதிரை வேகத்தில் மாரடைப்பு வந்து விடும். ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு எது வந்தாலும் உடனே விழிப்பாகி, டிரெட் மில், எக்கோ கார்டியோ கிராம் போன்ற சோதனைகளை செய்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் வந்திருக்கிறதா என்பதை அறிய ஜி.டி.டி. பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றையும் அடிக்கடி சோதித்துக் கொள்ள வேண்டும். சோம்பேறித்தனத்தால் வரும் வியாதிக்கு சிகிச்சை எடுப்பதிலும் கூட சோம்பேறித் தனமாக இருந்து விடக்கூடாது. நூறு வயது வாழ ஆசைப்படுபவர்களுக்கு ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை உள்பட வாழ்க்கையில் பல விஷயங்கள் 100-க்குள் இருக்க வேண்டும். எடை மட்டும் 100 எட்டவே கூடாது.

    இதயமானது விலை மதிப்பில்லாதது. அதை இழந்தால் பெறுவது மிக மிக கடினம். அதனால் இருக்கும் போதே நன்றாக கவனித்து கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் வாழ்வது உங்களுக்காக மட்டும் இல்லை. உங்கள் குடும்பத்தார் மற்றும் சமுதாயத் திற்காகவும் சேர்த்து வாழ்கிறீர்கள். அப்படி இருக்கிற பொழுது உங்களின் உடல் ரொம்ப ரொம்ப முக்கியம். அதனை நம்பி தான் உங்களது வாழ்க்கையும், உங்களை சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கையும் ஓடுகிறது.


    எது எதற்கோ மனிதர்களாகிய நாம் வீணாக பணத்தை செலவு செய்கிறோம்.அந்த செலவுகளை குறைத்து கொண்டு நமது உடலை பாதுகாத்து கொள்வதற்கு பயன்படும் ஹெல்த் இன்சூரன்சை நீங்கள் போட்டு ெகாள்ளலாம். இது பிற்காலத்தில் நமக்கு ஏதோ ஒருவகையில் உதவும். ஒருவேளை நமக்கு திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டால் கையில் இருந்து பணத்தை கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமும் இருக்காது. அந்த சமயம் இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் ஒரு வகையில் நமக்கு சிகிச்சையை பெற்று கொடுக்கும்.

    தொடர்புக்கு:

    info@kghospital.com, 98422 66630

    Next Story
    ×