என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சின்ன சின்ன தீர்வுகள்!.... மருத்துவம் அறிவோம்- 88
    X

    சின்ன சின்ன தீர்வுகள்!.... மருத்துவம் அறிவோம்- 88

    • வைட்டமின்கள், தாது உப்புகள் குறைபாடு இருப்பதனை சுட்டிக்காட்டும் அறிகுறிகளாக இருக்கலாம்.
    • புரத குறைபாடும் நகங்களில் மாறுதல்களை ஏற்படுத்தலாம்.

    நாம் உணவில், ஊட்டச்சத்தில் குறைபாடு ஏற்படாது இருக்க எத்தனை கவனம் செலுத்த வேண்டி உள்ளது. அப்படி செய்தாலும் ஏதாவது பற்றாகுறை இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

    * சோர்வு *வெளிச் சருமம் * எப்போதும் களைப்புடன் இருத்தல் *சின்ன விஷயங்களுக்கு எரிச்சல் படுதல் *எளிதில் உடையும் நகம் * முடி கொட்டுதல் * காயங்கள் ஆறுவதற்கு கூடுதல் நாட்கள் எடுத்துக் கொள்ளுதல்.

    இவைகள் வைட்டமின்கள், தாது உப்புகள் குறைபாடு இருப்பதனை சுட்டிக்காட்டும் அறிகுறிகளாக இருக்கலாம்.

    சத்து இல்லாத உணவினை உட்கொள்ளும் போது பசியின்மை, உணவில் ஆர்வம் இன்மை, எப்போதும் களைப்பாய் இருக்கின்றது என்ற உணர்வு, சக்தியின்மை, பலவீனம், அடிக்கடி நோய் வாய் படுதல், நோயில் இருந்து மீண்டுவர நீண்ட காலம் எடுத்துக் கொள்ளுதல், கவனச் சிதறல், எப்போதும் குளிர்வது போல் இருத்தல் என சத்து இல்லாத உணவு உண்ணும் போது ஏற்படலாம்.

    கண்கள்- கண்களைச் சுற்றி கருவளையம், கண் கீழ் சிறு பை போல் தசை தொங்குவது. இவை அலர்ஜி, உணவு, நீர் வற்றிய உடல் காரணமாக இருக்கலாம்.

    இரவு கண் பார்வை மங்குதல், வைட்டமின் 'ஏ' குறைபாடாக இருக்கலாம். கண்கார்வை குறைபாடு- வைட்டமின் டி குறைபாடு வெளிர் கண்கள், இரும்பு சத்து குறைபாடு ஆகியவை இருக்க வாய்ப்புகள் உண்டு.


    ஈறுகளில் ரத்த கசிவு வைட்டமின் சி போலிக் ஆசிட் குறைபாடு.

    * வாய் புண்கள்- பி3, பி12, பாலிக் ஆசிட், கால்ஷியம் குறைபாடு,

    * வாய் ஓரங்களில் வெடிப்பு- பி2 குறைபாடு

    * தேய்ந்த பல் எனாமல்- வைட்டமின் ஏ, டி. கே. கால்ஷியம் குறைபாடு.

    * நாக்கில் வலி, புண்- பி2, பி3, போலின் ஆசிட் குறைபாடு.

    * வாசனை அல்லது ருசி சரியின்மை- சிங்க் குறைபாடு என இவைகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    சருமம்- வறண்ட சொர சொரப்பான சருமம்- வைட்டமின் ஏ, ஈ குறைபாடு.

    மூக்கில் காரணமின்றி ரத்தம் வடிதல்- வைட்டமின் 'சி' குறைபாடு மற்றும் சரும குறைபாடுகள் பி2, பி3, பி4, பயோடின் சிங்க் குறைபாடுகளாலும் ஏற்படலாம்.

    மனச்சோர்வு- மறதி போன்றவை பி, பி5, பயோடின் இவைகளால் ஏற்படலாம். படபடப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகளும் இருக்கலாம்.

    கமலி ஸ்ரீபால்

    நகம்- ஸ்பூன் போல் வளைந்த நகம் பி2, இரும்பு சத்து குறைபாடாக இருக்கலாம். உடையும் நகங்கள் கால்ஷியம், மக்னீசம், அயோடின் குறைபாடாக இருக்கலாம். புரத குறைபாடும் நகங்களில் மாறுதல்களை ஏற்படுத்தலாம்.

    ஆக ஒவ்வொரு அறிகுறியின் வெளிப்பாட்டிற்கும் ஏதேனும் ஊட்டச் சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம். அதனை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சத்துணவு, மாத்திரைகள் என எடுத்துக் கொள்ளும் போது ஆரம்ப நிலையிலேயே நல்ல முன்னேற்றம் பெற முடியும்.

    இது போலத்தான் தாது உப்புகள் குறைபாடும் பாதிப்புகளாக வெளிப்படும்.

    * சரும பாதிப்பு, * முடிகொட்டுதல், * பரு * காயங்கள் ஆறுவதில் தாமதம் இவை சிங்க் குறைபாட்டின் காரணமாக இருக்கலாம்.

    * சதை துடிப்பு, * சதை பலமின்றி * முறையற்ற இருதய துடிப்பு * மலச்சிக்கல் இவை பொட்டாசியம் குறைபாட்டின் காரணமாக இருக்கலாம்.

    * தசை பிடிப்பு, படபடப்பு, மலச்சிக்கல், முறையான தூக்கமின்மை இவற்றிக்கு மங்கனீஸ் குறைபாடு காரணமாக இருக்கலாம்.

    * இளநரை * அடிக்கடி நோய்வாய் * சோர்வு * பலவீனம் * மறதி இவற்றிக்கு 'காப்பர்' காரணமாக இருக்கலாம்.

    * மெலிந்த முடி * நோய் எதிர்ப்பு சக்தி குறைவு * கர்ப்ப பிரச்சினைகள் * தசைபலவீனம் இவற்றிக்கு 'செலினியம்' குறைபாடு காரணமாக இருக்கலாம்.

    * எலும்பு உறுதியின்மை * வெளிறிய சருமம் * உடையும் நகம் * மூச்சு வாங்குதல் * முடி கொட்டுதல் இவற்றிற்கு இரும்பு சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம்.

    * எலும்பு வலி * பல் சொத்தை * சதை பிடிப்பு *உறுதியற்ற நகங்களுக்கு கால்ஷியம் குறைபாடு காரணமாக இருக்கலாம்.

    * வீங்கிய தைராய்டு * சில்லென்ற கை, கால் * முறையற்ற மாத விலக்கு * கவனச்சிதறல் இவற்றிக்கு அயோடின் குறைபாடு காரணம் ஆகும்.

    இப்படி சிறு அளவில் தேவைப்படும் தாது உப்புகள் கூட பெரிய அளவு பாதிப்பினை ஏற்படுத்தலாம். இந்த அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்வது நம் உடலுக்கு நல்ல கவனத்தினைக் கொடுக்க உதவும்.

    சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கா?

    * சரியாக குறிப்பிட்ட நேரத்தில் மருந்து, ஊசி எடுத்துக் கொண்டு சாப்பிடுங்கள். அதிகமாக சாப்பிடாதீர்கள். நொறுக்கு தீனி வேண்டாம்.

    * உடற்பயிற்சி முடித்த உடனே சாப்பிட வேண்டாம்.

    * இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவ அறிவுரைபடி உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகம் குறையும் அளவு கவனமின்றி சாப்பிடாமல் இருக்கக் கூடாது.

    * 2 அல்லது 2½ லிட்டர் அளவு நீர் பருகுவது அவசியம். * பொரித்த, சர்க்கரை உணவுகள் வேண்டாமே. * ஒவ்வொரு உணவிலும் காய்கறி சாலட் அவசியம்.

    * 20 அல்லது 25 கிராம் அளவு பச்சை வெங்காயம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    * ஒரு மணி நேர உடற்பயிற்சி அவசியம். பயிற்சியாளர் ஆலோசனை பெற்று செய்யுங்கள்.

    * நார் சத்து மிகுந்த உணவே சிறந்தது.

    சின்ன பிரச்சினை சின்ன தீர்வு:

    * அடிக்கடி தலைவலி என்கிறீர்களா- தர்பூசணி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கடும் வெயிலில் இது மிக அவசியம்.

    * செரிமாணம் சரிவர இல்லையா- பப்பாளி பழம் எடுக்கலாமே.

    * நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதா- ஆரஞ்சு பழம் ஒன்று அன்றாடம் சேர்த்துக் கொள்ளுங்கள். நெல்லிக்காய், எலுமிச்சை கூட மிக நல்ல பலனைத் தரும்.

    * உதடு வெடிப்பு இருக்கின்றதா? - தேங்காய், தேங்காய் பால் எடுத்துக் கொள்ளலாம்.

    * ஹார்மோன் பிரச்சினையால் முகப்பரு ஏற்படுகின்றதா- பூசணி விதை ஒரு டீஸ்பூன் அளவு அன்றாடம் எடுக்கலாம்.

    * வெய்யிலில் உடல் கருக்கின்றதா- அன்றாடம் அல்லது அடிக்கடி தக்காளி ஜூஸ் குடியுங்கள்.

    * கண் சுற்றி கரு வளையமா- வெள்ளரிக்காய் சாப்பிடுங்க.

    * தலையில் பொடுகு தொந்தரவா- சியா விதைகளை சாப்பிடுங்கள்.

    * முடி பலமிழந்து இருக்கின்றதா- 10 பாதாம் தினமும் ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    * உடல் செயல் திறனைக் கூட்ட- தினமும் ஒரு கிளாஸ் சீரக தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.

    * நல்ல மனநிலை வேண்டுமா- ஒரு வாழைப்பழம் போதும்.

    * முடி கொட்டுதா- 4 அல்லது 5 வால்நட் சாப்பிடுங்க.

    * சதை பிடிப்பு இருந்தால்- உணவில் பசலை கீரை அவசியம்.

    * சோர்வாக இருந்தால்- ஒரு கப் வேக வைத்த சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடலாம்.

    இது சிகிச்சை அல்ல. சில உணவுகளின் முக்கியத்தினைக் கூறுவது மட்டுமே. இயற்கை முறை, ஆயுர்வேத முறைகளில் உணவுக்கு கொடுக்கப்படும் குறிப்புகள் இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.

    இதே போல் மேலும் சில குறிப்புகளையும் அறிவோம்.

    * தலைவலி- வாழைப்பழம் நல்லது. இதில் உள்ள மக்னீசியம் தசைகளின் இறுக்கத்தினை நீக்குகின்றது.

    * மலச்சிக்கல்- ஆப்பிள் உண்ணலாம்- நார் சத்து கொண்டது.

    * வயிற்றுப் போக்கு- வாழைப் பழம் எடுத்துக் கொள்ள பொட்டாசியம் குறைபாடு தவிர்க்கப்படும்.

    * சாதார தொண்டை கரகரப்பு- சுத்தமான தேனை வெது வெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.

    * நோய் எதிர்ப்பு சக்தி கூட- ஆரஞ்சு பழம்

    * சோர்வு, சக்தியின்மை- ஓட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். * ஜீரணக் குறைவு- இஞ்சி சேர்க்க எளிதில் தீர்வு கிடைக்கும்.

    * ரத்த சோகை- இரும்பு சத்து சிறைந்த பசலைக் கீரை உணவில் சேர்க்கலாம்.

    * மூட்டு வலி- சிறிதளவு அன்னாசி பழம் தினம் எடுத்துக் கொள்ளலாம்.

    * கிருமிகளுடன் போராட- பூண்டு உணவில் சேர்க்க வேண்டும்.

    தசை பிடிப்பு-இளநீர் குடிக்க தாது உப்புகள் சீராகும்.

    இவை அனைத்தோடும் கூட உழைப்பற்ற வாழ்க்கை முறை என்பது மிகப்பெரிய ஆபத்து என்பதனை உணர வேண்டும். உடற்பயிற்சி இன்மை, பல நேரம் அமர்ந்தே இருப்பது போன்றவை உடல் பருமன், நீரிழிவு பிரிவு2, மூட்டு வலி, உடலின் செயல்பாட்டுத்திறன் குறைவு, இருதய பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் என எல்லா பாதிப்புகளையும் கொண்டு வந்து விடும். உடற்பயிற்சி ஒரு மணி நேரம் செய்து விட்டு 10 மணி நேரம் நகராது இருப்பது என்பதும் மேற்கூறிய பாதிப்புகளைத் தரும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பது என்பது அவசியம். அதிக நேரம் உட்கார்ந்தபடி இருப்பது படுத்தபடி இருப்பது எண்ணற்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    * தலைவலி * குழப்பம் * முதுகுவலி *இறுகிய தோள் *மூச்சு முறையற்று இருத்தல் * தசை வலுவின்மை * இருதய பாதிப்பு அதிகம் ஏற்படுதல் * எடை கூடுதல் * இடுப்பு இறுக்கம் * மூட்டு வலி * ரத்த ஓட்டம் சீரற்று இருத்தல்.

    இது போன்ற சில குணங்களை விட்டு விட வேண்டும்.

    * பிறர் பற்றி புறங் கூறுதல் * தன் மீதே சந்தேகம் * தீய பழக்கங்கள் * தோல்வி பயம் * அழிவுப் பூர்வமான பேச்சு * உறவுகளை முறிக்கும் கடுமையான பேச்சு * அனைவரும் ஓடி ஓடி உழைப்பது * பிறர் முன் தன்னைத் தானே இறக்கிக் கொள்ளுதல் போன்ற பழக்கங்களை இப்போதே விட்டு விடுதல்.

    அதே போன்று எது நடந்தாலும் அதனை உங்களை நோக்கி குறி வைப்பதாகவே நினைப்பது தவறு.

    அதிக மன உளைச்சல் கூடாது. பழைய துன்ப நினைவுகளில் மூழ்கி மூழ்கி எழ வேண்டாமே. எனக்கெதற்கு என தரமற்ற உணவு எடுக்க வேண்டாம். உங்களுக்குரிய கவனிப்பு அவசியம்.

    Next Story
    ×