என் மலர்tooltip icon

    ரியோ ஒலிம்பிக்ஸ்-2016

    பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் ஜோதியை ஏற்றிவைக்க அந்நாட்டின் கால்பந்தாட்ட ஜாம்பவானான பீலேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    ரியோ டி ஜெனீரோ:

    பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் ஜோதியை
    ஏற்றிவைக்க அந்நாட்டின் கால்பந்தாட்ட ஜாம்பவானான பீலேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிகளின் துவக்க விழா நிகழ்ச்சியின்போது ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படுவது வழக்கம்.

    இந்த போட்டிகள் முடிந்த பின்னர் அடுத்த முறை ஒலிம்பிக் போட்டியை நடத்தவுள்ள நாட்டிடம் அந்த ஜோதியை ஒப்படைப்பது மரபாக உள்ளது.

    அவ்வகையில், வரும் 5-ம் தேதி ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள மாரக்கானா விளையாட்டரங்கில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் ஜோதியை ஏற்றிவைக்க பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவானான பீலேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த அழைப்பு தொடர்பாக நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த பீலே, ‘சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் மற்றும் பிரேசில் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் கார்லஸ் ஆர்த்தர் நுஸ்மேன் ஆகியோரும் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைக்க வருகை தருமாறு தனிப்பட்ட முறையில் என்னை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    பிரேசில் நாட்டை சேர்ந்தவன் என்ற முறையில் இந்த ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைக்க நான் மிகவும் விரும்புகிறேன். ஆனால், சில நிறுவனங்களுடன் முன்னரே ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி எனது கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது.

    எனவே, அவர்களுடன் கலந்துபேசி அந்த தேதியில் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைக்க எனக்கு அனுமதி கிடைக்குமா? என்பது தொடர்பாக ஆலோசித்த பின்னர் எனது முடிவை நாளை அறிவிப்பேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

    17 வயதில் முதன்முதலாக 1962-ம் ஆண்டு சிலியில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடி பிரேசில் நாட்டுக்கு வெற்றிக் கோப்பையை பெற்றுத்தந்த பீலே(75), பின்னர் 1970-ம் ஆண்டு மெக்சிகோ நாட்டிலும், 1985-ல் ஸ்வீடனிலும் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் தனது தாய்நாடான பிரேசிலுக்கு வெற்றிக் கோப்பையை பெற்றுத் தந்தார்.

    ரியோ டி ஜெனீரோ நகரில் வரும் 5-ம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடக்கவிழா நடைபெறவுள்ள மாரக்கானா விளையாட்டரங்கில் வரலாற்று சிறப்புக்குரிய தனது ஆயிரமாவது கோலை பீலே பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    2-வது கட்ட சோதனையிலும் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் குண்டு எறிதல் வீரர் இந்தர்ஜீத் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி :

    ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த இந்திய குண்டு எறிதல் வீரர் இந்தர்ஜீத், சமீபத்தில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். இதையடுத்து 2-வது கட்ட சோதனையான ‘பி’ மாதிரி சோதனையை (ஏற்கனவே அவரிடம் எடுக்கப்பட்ட ரத்தம் அல்லது சிறுநீரில் ஒரு பகுதி தனியாக பிரித்து வைக்கப்பட்டிருக்கும். அது தான் பி மாதிரி) நடத்தும்படி அவர் கோரினார்.

    இந்த நிலையில் ‘பி’ மாதிரி சோதனையிலும் அவர் ஊக்கமருந்து பயன்படுத்திருப்பது உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் அவரது ஒலிம்பிக் கனவு ஏறக்குறை தகர்ந்து போய் விட்டது. இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள அவரிடம் அடுத்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி, தண்டனையை அறிவிக்கும். ஆசிய சாம்பியனான 28 வயதான இந்தர்ஜீத்துக்கு 4 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
    ×