என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது கட்ட சோதனையிலும் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி: குண்டு எறிதல் வீரர் இந்தர்ஜீத் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது
    X

    2-வது கட்ட சோதனையிலும் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி: குண்டு எறிதல் வீரர் இந்தர்ஜீத் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது

    2-வது கட்ட சோதனையிலும் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் குண்டு எறிதல் வீரர் இந்தர்ஜீத் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி :

    ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த இந்திய குண்டு எறிதல் வீரர் இந்தர்ஜீத், சமீபத்தில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். இதையடுத்து 2-வது கட்ட சோதனையான ‘பி’ மாதிரி சோதனையை (ஏற்கனவே அவரிடம் எடுக்கப்பட்ட ரத்தம் அல்லது சிறுநீரில் ஒரு பகுதி தனியாக பிரித்து வைக்கப்பட்டிருக்கும். அது தான் பி மாதிரி) நடத்தும்படி அவர் கோரினார்.

    இந்த நிலையில் ‘பி’ மாதிரி சோதனையிலும் அவர் ஊக்கமருந்து பயன்படுத்திருப்பது உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் அவரது ஒலிம்பிக் கனவு ஏறக்குறை தகர்ந்து போய் விட்டது. இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள அவரிடம் அடுத்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி, தண்டனையை அறிவிக்கும். ஆசிய சாம்பியனான 28 வயதான இந்தர்ஜீத்துக்கு 4 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
    Next Story
    ×