என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இந்தியா-பாகிஸ்தான் போர் பதட்டம்: தவறான தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை- புதுச்சேரி அரசு எச்சரிக்கை
    X

    இந்தியா-பாகிஸ்தான் போர் பதட்டம்: தவறான தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை- புதுச்சேரி அரசு எச்சரிக்கை

    • தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்.
    • வான்வழி தாக்குதலின் போது வெளியே செல்வதும், புகைப்படம் எடுப்பதும் கூடாது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா-பாகிஸ்தான் போர் பதட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வான்வழித் தாக்குதல் ஏதேனும் நடந்தால் உங்கள் வீட்டில பாதாள அறை இருக்க வாய்ப்பில்லை என்பதால் குளியல் அறையை தேர்வு செய்யலாம். தாக்குதலில் ஜன்னல் கதவுகள் நொறுங்காமல் இருக்க பிளாஸ்டிக் சீட் வைத்து ஒட்டி விடுங்கள்.

    வீட்டில் உள்ள மெத்தை, மேஜை, புத்தகங்கள் வைத்து தற்காலிக குடில் அமைத்து கொள்ளுங்கள். வாய் சிறிதாக திறந்த நிலையில் பின்னந்தலையினை கைகளால் மறைத்தவாறு தரையில் குப்புறப்படுத்து கொள்ள வேண்டும்.

    போதிய உணவு, குடிநீர் இருப்பை உறுதி செய்யுங்கள். குளியல் வாளி, டப் என அனைத்திலும் நீர் வைத்துக் கொள்ள வேண்டும். மின் இணைப்பு, சமையல் எரிவாயு இணைப்பை அனைத்து வையுங்கள். ஜன்னல் அருகே இருக்காதீர்கள். பறந்து வரும் இடிபாடுகளிடம் இருந்து காத்து கொள்ள போர்வை, விரிப்புகள் கொண்டு மூடி கொள்ள வேண்டும்.

    அபாய சங்கு ஒலிப்பதன் மூலம் விடுக்கப்படும் விமான தாக்குதல் குறித்த எச்சரிக்கைகளை பின்பற்றவும். உங்கள் சுற்று வட்டாரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். வான்வழி தாக்குதலின் போது வெளியே செல்வதும், புகைப்படம் எடுப்பதும் கூடாது.

    சுவர், ஜன்னல் அருகே நிற்க கூடாது. பெரும் கூட்டமாக நிற்க கூடாது. தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். அனைத்தும் சரியாகி விட்டதாக அரசு அறிவிக்கும் வரை வீட்டினுள் இருங்கள். வான்வழி தாக்குதல் குறித்த எச்சரிக்கை ஆபத்துக்கான சமிக்கை என்பதால் அதை அலட்சியப்படுத்த கூடாது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×