search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் பஜாஜ் வி15 பவர் அப் வேரியன்ட் வெளியானது
    X

    இந்தியாவில் பஜாஜ் வி15 பவர் அப் வேரியன்ட் வெளியானது

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பஜாஜ் வி15 பவர் அப் வேரியன்ட் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. #Bajaj #motorcycle



    பஜாஜ் வி15 பவர் அப் வேரியன்ட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியானது. இந்தியாவில் புதிய பஜாஜ் வி15 பவர் அப் வேரியன்ட் விலை ரூ.65,700 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெயருக்கு ஏற்றார்போல் புதிய பவர் அப் வேரியன்ட் முந்தைய மாடலை விட அதிக செயல்திறன் வழங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

    2019 பஜாஜ் வி15 பவர் அப் மாடலில் நிறங்கள், கிராஃபிக்ஸ், பின்புறம் பேக்ரெஸ்ட் உள்ளிட்டவற்றை புதிதாக வழங்கப்பட்டுள்ளது. ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட மூலப்பொருளால் செய்யப்பட்ட வி சின்னம் வாகனத்தின் பெட்ரோல் டேன்க்கில் இடம்பெற்றுள்ளது.

    எனினும், வி15 பவர் அப் மாடலில் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படவில்லை. பஜாஜ் வி15 பிரத்யேக வடிவமைப்பு மோட்டார்சைக்கிளை ஓட்டும் அனுபவத்தை மேம்படுத்துகிறது. 137 கிலோ எடையுடன் இந்த மோட்டார்சைக்கிள் நகரம் மற்றும் நெடுந்தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கிறது.



    புதிய பஜாஜ் வி15 வெர்ஷனில் 149.5 சிசி ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 12.8 பி.ஹெச்.பி. பவர், 13 என்.எம். டார்க் செயல்திறன் கொண்டுள்ளது. இது முந்தைய வி15 மாடலை விட ஒரு பி.ஹெச்.பி. பவர் மற்றும் 0.3 என்.எம். டார்க் அதிக செயல்திறன் வழங்குகிறது.

    இந்த என்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்குகிறது. எனினும், இதன் கியர்ஷிஃப்ட் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் யமஹா மாடல்களில் வழங்கப்படுவதை போன்று முதல் கியர் ஷிஃப்ட் டவுன், மற்ற நான்கு கியர்களுக்கு ஷிஃப்ட்-அப் செய்ய வேண்டும். முந்தைய மாடலில் அனைத்து கியர்களும் ஷிஃப்ட் அப் முறையில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×