search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஸ்மெடிக் மாற்றங்களுடன் பஜாஜ் பிளாட்டினா 110 அறிமுகம்
    X

    காஸ்மெடிக் மாற்றங்களுடன் பஜாஜ் பிளாட்டினா 110 அறிமுகம்

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புது அம்சங்களுடன் இந்தியாவில் பிளாட்டினா 110 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #platina



    பஜாஜ் ஆட்டோ இந்தியா நிறுவனம் இந்தியாவில் 2018 பிளாட்டினா 110 மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய 110 பிளாட்டினா மாடல் பல்வேறு மாற்றங்கள் மற்றும் புது அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பிளாட்டினா 110 விலை ரூ.49,300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய பஜாஜ் பிளாட்டினா 110 மாடலில் சக்திவாய்ந்த என்ஜின் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது. முன்பக்க டிஸ்க் வசதியுடன் கிடைக்கும் புது பிளாட்டினா ஒரே வடிவமைப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிளாக்-அவுட் அலாய் வீல்கள், புது கிராஃபிக்ஸ், எல்.இ.டி. டி.ஆர்.எல். உள்ளிட்டவை மோட்டார்சைக்கிளின் தோற்றத்தை புதிதாக வெளிப்படுத்துகிறது.



    பஜாஜ் பிளாட்டின் 110 மாடலில் ஆன்டி-ஸ்கிட் பிரேக்கிங் சிஸ்டம் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது. இது ஹோன்டா மோட்டார்சைக்கிள்களில் வழங்கப்படும் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் போன்றதாகும். இந்த அம்சம் இரண்டு சக்கரங்களில் பிரேக் பிடிக்கும் போது சம அளவு அழுத்தம் கொடுக்கச் செய்யும்.

    புது பிளாட்டினா 110 மாடல் இரண்டு மீட்டர் நீளமாக இருப்பதால், நகரத்தில் பயன்படுத்த வசதியாக இருக்கிறது. 200 எம்.எம். கிரவுன்ட் கிளியரன்ஸ் கொண்டிருப்பதால் நாடு முழுக்க பெரும்பாலான சாலைகளில் பயணிக்க வசிதயாக இருக்கும். புது பிளாட்டினா 110 மாடலில் 115சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 8.5 பி.ஹெச்.பி. பவர், 9.8 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குவதோடு 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் பஜாஜ் டிஸ்கவர் 110 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. #platina #motorcycle
    Next Story
    ×