search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 இந்தியாவில் வெளியானது
    X

    ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 இந்தியாவில் வெளியானது

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் வெளியானது. #RoyalEnfieldTwins



    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மாடல்களின் துவக்க விலை முறையே ரூ.2.50 லட்சம் மற்றும் ரூ.2.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய ராயல் என்ஃபீல்டு ட்வின் மோட்டார்சைக்கிள்களில் அதிநவீன கிளாசிக் தோற்றம் கொண்டிருக்கிறது. கான்டினென்டல் ஜி.டி. 650 மாடலில் ரேசர் தீம், இன்டர்செப்டர் 650 மாடலில் ஸ்கிராம்ப்ளர் வடிவம் கொண்ட கிளாசிக் தோற்றம் கொண்டிருக்கிறது. இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் 60களில் பிரபலமான இன்டர்செப்டார் மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. 

    ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜி.டி. 650 மாடலில் கஃபே ரேசர் வடிவமைப்பு கொண்டுள்ளது. இதன் வடிவமைப்பு 1950களில் பிரபலமாக இருந்த கான்டினென்டல் ஜி.டி. 250 மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. 

    ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்களில் 649சிசி ஏர்/ஆயில்-கூல்டு பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 47 பி.ஹெச்.பி. பவர், 52என்.எம். டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது.



    புதிய ராயல் என்ஃபீல்டு ட்வின் மாடல்களின் முன்பதிவு இந்தியா முழுக்க துவங்கி இருக்கிறது. அதன்படி புதிய மோட்டார்சைக்கிள்களை முன்பதிவு செய்ய ரூ.5000 முன்பதிவு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் 41எம்.எம். டெலிஸ்கோபிக் முன்பக்க ஃபோர்க், 110 எம்.எம். டிராவெல் மற்றும் ட்வின் காயில்-கவர் ஷாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் 18-இன்ச் 36-ஸ்போக் அலுமினியம் அலாய் வீல்கள், பைரெலி ஃபேன்டம் ஸ்போர்ட்காம்ப் டையர்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மாடல்களில் முன்புறம் 320 எம்.எம்., பின்புறம் 240 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது.

    ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650: மார்க் த்ரீ, கிளிட்டர் & டஸ்ட், ஆரஞ்சு கிரஷ், ரேவிஷிங் ரெட், சில்வர் ஸ்பெக்டர் மற்றும் பேக்கர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

    இதேபோன்று ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜி.டி. 650: பிளாக் மேஜிக், வென்ச்சுரா புளு, மிஸ்டர் கிளீன், டாக்டர் மேஹெம் மற்றும் ஐஸ் குவீன் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. #RoyalEnfieldTwins #Interceptor650 #ContinentalGT650
    Next Story
    ×