search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள் இந்திய விலை
    X

    ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள் இந்திய விலை

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய 650சிசி மோட்டார்சைக்கிள்களின் இந்திய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #RoyalEnfield #motorcycle



    இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 650சிசி மோட்டார்சைக்கிள்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் விலை விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய 650சிசி மோட்டார்சைக்கிள்கள் இந்திய விலை ரூ.4 லட்சம் (ஆன்-ரோடு) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜி.டி. 650 மற்றும் இன்டர்செப்டார் மாடல்கள் இந்தியாவில் நவம்பர் 14ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இவற்றின் முன்பதிவுகள் அறிமுக தினத்தன்று துவங்கி, விநியோகம் ஜனவரி 2019 வாக்கில் துவங்கும் என தெரிகிறது. ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள்களின் முன்பதிவு கட்டணம் ரூ.5,000 என நிர்ணயம் செய்யப்படுகிறது.

    விலையை பொருத்த வரை இன்டர்செப்டார் மாடலுக்கு ரூ.4 லட்சம் என்றும் இதன் வரி மற்றும் இதர கட்டணங்கள் இல்லாமல் ரூ.3.25 லட்சம் ஆகும். ராயல் என்ஃபீல்டு ஜி.டி. 650 எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்படலாம். இரண்டு மாடல்களும் பழங்கால வடிவமைப்பு மற்றும் விலை குறைந்த பேரலெல்-ட்வின் மாடல்களாக இருக்கும்.



    ராயல் என்ஃபீல்டு 650சிசி ட்வின் மாடல்கள் ஏற்கனவே சரவ்தேச சந்தையில் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்டர்செப்டார் 650 மாடல் ஐரோப்பாவில் 6200 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.5.16 லட்சம்) என்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மாடலின் விலை 6400 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.5.33 லட்சம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் ஜி.டி. மாடல்களில் 649சிசி பேரலெல்-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 47 பி.ஹெச்.பி. பவர், 52 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பிடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் (ஸ்டான்டர்டு ஆப்ஷன்) வழங்கப்படுகிறது.
    Next Story
    ×