search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோல்ஸ் ராய்ஸ் பறக்கும் ஹைப்ரிட் டாக்சி அறிவிக்கப்பட்டது
    X

    ரோல்ஸ் ராய்ஸ் பறக்கும் ஹைப்ரிட் டாக்சி அறிவிக்கப்பட்டது

    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஹைப்ரிட் பறக்கும் டாக்சி ஃபார்ன்பரோ சர்வதேச விமான கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. #RollsRoyce



    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் பறக்கும் டாக்சி என்ற பெயரில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வாகனம் செங்குத்தாக டேக் ஆஃப் ஆகி, தரையிறங்கும் வசதியை கொண்டிருக்கும் என ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்துள்ளது.

    லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ரோல்ஸ் ராய்ஸ் ஹைப்ரிட் வாகனத்தை உருவாக்கும் திட்டத்தை முதல் முறையாக ஃபார்ன்பரோ விழாவில் அறிவித்தது. அடுத்த 18 மாதங்களுக்குள் செங்குத்தாக டேக் ஆஃப் ஆகி, தரையிறங்கும் வாகனத்தின் ப்ரோடோடைப் பதிப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்துள்ளது. அதன்படி 2020-களில் வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்பட்டு வானில் பறக்கலாம்.

    ரோல்ஸ் ராய்ஸ் EVTOL விமானம் நான்கு அல்லது ஐந்து பேர் அமரக்கூடியதாகவும், 500 மைல் வரை பறக்கும் திறன், அதிகபட்சம் மணிக்கு 200 மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும். 



    "சந்தையில் இதுபோன்ற பறக்கும் வாகனத்தை இன்னும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் பார்க்க முடியும். நாங்கள் எங்களது பறக்கும் வாகனத்தை இரண்டு ஆண்டுகளில் செயல்விளக்கம் தருவோம்," என ரோல்ஸ் ராய்ஸ் மின்னணு குழு தலைவர் ராப் வாட்சன் தெரிவித்திருக்கிறார்

    இந்த ஹைப்ரிட் வாகனத்தை உருவாக்க இதுவரை ஒற்றை இலக்க மில்லியன் பவுன்ட்கள் வரை செலவாகும் நிலையில், இவை வழக்கமான கேஸ் டர்பைன் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக்கல் சிஸ்டம் கொண்டிருக்கும். ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்க ஆராய்ச்சி செய்வதாகவும் இது EVTOL மாடலை விட மேம்பட்டு இருக்காது என தெரிவித்திருக்கிறது.

    ரோல்ஸ் ராய்ஸ் மட்டுமின்றி உபெர், கிட்டி ஹாக், லிலியம் அவியேஷன், சஃப்ரான், ஹனிவெல் என பல்வேறு இதர நிறுவனங்களும் பறக்கும் திறன் கொண்ட வாகனங்களை உற்பத்தி செய்ய ஆராய்ச்சி செய்கின்றன. #RollsRoyce #hybrid
    Next Story
    ×