search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேடிஎம் 390 அட்வென்ச்சர் இந்திய வெளியீட்டு விவரம்
    X

    கேடிஎம் 390 அட்வென்ச்சர் இந்திய வெளியீட்டு விவரம்

    கேடிஎம் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஆஸ்த்ரியாவை சேர்ந்த பைக் தயாரிப்பு நிறுவனமான கேடிஎம்-இன் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 390 அட்வென்ச்சர் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்கள் அதிகாகரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேடிஎம் 390 அட்வென்ச்சர் கேடிஎம் நிறுவனத்தின் தலைசிறந்த மோட்டார்சைக்கிளாக இருக்கும் என்றும் இது டியூக் மற்றும் ஆர்சி மாடல்களுடன் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிள் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் பிஎம்டபுள்யூ G 310 GS மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கேடிஎம் பிரான்டு தேர்வு செய்யப்பட்டோருக்கு முக்கியமானதாக இருக்கிறது. 390 அட்வென்ச்சர் மூலம், இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரீமியம் டூயல்-ஸ்போர்ட் பிரிவில் கால்பதிக்க இருக்கிறது. இது இந்திய சாலைகளுக்கு ஏற்ற பிரிவாகும். என பஜாஜ் ஆட்டோ நிறுவன தலைவர் அமித் நந்தி தெரிவித்திருந்தார். 

    கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடலில் டியூக் 390 பைக் கொண்டிருக்கும் சில அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதிய மாடலில் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப், ரைடு-பை-வையர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை 373 சிசி சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதே இன்ஜின் கேடிஎம் 390 டியூக் மற்றும் ஆர்சி 390 மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 43 பிஹெச்பி பவர், 37 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் பெரிய ஃபியூயல் டேன்க், அகலமான மற்றும் சவுகரியமான சீட்கள் வழங்கப்படலாம்.
    Next Story
    ×