search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புகாட்டி போன்ற செயல்திறன் கொண்ட ஐயன் மேன் பறக்கும் சூட்
    X

    புகாட்டி போன்ற செயல்திறன் கொண்ட ஐயன் மேன் 'பறக்கும் சூட்'

    புகாட்டி வெரான் மாடல் காரில் உள்ளதை போன்ற செயல்திறன் கொண்ட பறக்கும் சூட் ஒன்றை கிராவிட்டி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனர் கண்டறிந்திருக்கிறார்.
    புதுடெல்லி:

    ஹாலிவுட் சினிமாவின் கற்பனை கதாபாத்திரமான ஐயன் மேன் மார்வெல் காமிக் புத்தகங்கள் மற்றும் பல்வேறு திரைப்படங்களின் மூலம் நம்மை மகிழ்வித்து உலக பிரபலமாக இருக்கிறது.

    திரைப்படம் மற்றும் காமிக் புத்தகங்களின் படி பணக்கார வியாபாரி ஒருவர் அதிநவீன சூட் ஒன்றை உருவாக்கி உலகம் எதிர்நோக்கும் ஆபத்துக்களில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில் ஐயன் மேன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கற்பனை கதாபாத்திரம் என்ற வகையில் ஐயன் மேன் முற்றிலும் கற்பனையானவர் என எண்ணிவிட வேண்டாம்.

    உண்மையில் ரிச்சர்டு பிரவுனிங் எனும் தொழிலதிபர் ஐயன் மேன் போன்று இயங்கும் சூட் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். கிராவிட்டி இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை துவங்கி, மனிதர்களை காற்றில் பறக்கச் செய்யும் உடையை ரிச்சர்ட் உருவாக்குகிறார். திரைப்படங்களில் வருமளவு அதிநவீன வசதிகள் இன்றி, இன்றைய காலத்துக்கு ஏற்ப முதற்கட்டமாக மனிதர்களை காற்றில் பறக்க வைக்கும் திறனை இவரது சூட் வழங்குகிறது.



    டேடுலஸ் மார்க் 1 (Daedalus Mark 1) என பெயரிடப்பட்டிருக்கும் இவரது ஐயன் மேன் போன்ற சூட் ஆறு மினியச்சர் ஜெட் இன்ஜின்களை கொண்டிருக்கிறது. இந்த இன்ஜின்கள் மனிதர்களை செங்குத்தாக காற்றில் பறக்க வைக்கிறது. இவர் தனது சூட்டில் பொருத்தியிருக்கும் இன்ஜின்களின் மொத்த செயல்திறன் 1,001 ஹெச்பி என கணக்கிடப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இவரது சூட் புகாட்டி வெரான் மாடல் காரில் உள்ளதற்கு இணையான செயல்திறன் வழங்குகிறது. சூட் பறக்கும் வேகம், திசை உள்ளிட்டவற்றை கைகளாலேயே கட்டுப்படுத்த முடியும் என்றும், எரிபொருள் பயன்பாடு மற்றும் இதர தகவல்கள் இவரது ஹெல்மெட் திரையில் தோன்றுகிறது.

    உலகில் அதிவேகமாக செல்லும் திறன் படைத்த ஜெட் இன்ஜின் கொண்ட சூட் என கின்னஸ் சாதனை படைத்திருக்கும் டேடுலஸ் மார்க் 1 மணிக்கு 51.53 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டதாக சான்று அளிக்கப்பட்டு இருக்கிறது.



    எனினும் இவரது பறக்கும் சூட் மணிக்கு அதிகபட்சமாக 320 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும் ஆயிரம் அடிகளுக்கு கீழ் தொடர்ச்சியாக பத்து நிமிடங்களுக்கு பறக்க முடியும் என ரிச்சர்டு பிரவுனிங் தெரிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக வேகம் மற்றும் பறக்கும் உயரம் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    டேடுலஸ் மார்க் 1 பறக்கும் சூட் HUD சிஸ்டம் பயன்படுத்துகிறது, இதில் சோனி ஸ்மார்ட் ரிளாஸ் டெவலப்பர் எடிஷன் பயன்படுத்தப்படுகிறது. இத்துடன் வைபை டேட்டா லின்கேஜ் சிஸ்டம் ஃபிளைட் சூட்டில் இருந்து கிரவுன்ட மானிட்டரிங்-க்கு லைவ் ஸ்ட்ரீம் செய்கிறது. மெடிக்கல் பபுள் டெடக்டர்கள் ஃபெயில்-சேஃப் ஃபியூயல் அலெர்ட் செய்கிறது. இதன் ஏர்பேக் சிஸ்டம் மோட்டார்சைக்கிள் ஏர்பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

    டேடுலஸ் மார்க் 1 பறக்கும் சூட் விளக்க வீடியோவை கீழே காணலாம்..,
    Next Story
    ×