என் மலர்tooltip icon

    இந்தியா

    இளம்பெண்ணை கொலை செய்து சிறுமியை கடத்திய கள்ளக்காதலன்
    X

    இளம்பெண்ணை கொலை செய்து சிறுமியை கடத்திய கள்ளக்காதலன்

    • கிரிஷூடனும் பிரவீனாவுக்கு தகராறு ஏற்பட்டிருக்கிறது.
    • பிரவீனா மற்றும் அவரது மகள் வெட்டப்பட்டதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடையூர் குன்னு பகுதியை சேர்ந்தவர் பிரவீனா(வயது34). இவருக்கு முதலில் சதீஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்தநிலையில் அவருக்கு கிரிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து பிரவீனா, தனது கணவரை விட்டு பிரிந்து கிரிஷுடன் சென்று விட்டார்.

    தனது மகள்களான அனர்கா(14), அபினா(9) ஆகிய இருவரையும் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். கிரிஷூடன் வயநாடு மானந்தவாடி பகுதியில் வாடகை வீடு ஒன்றில் குடித்தனம் நடத்தி வந்தார். இதற்கிடையே கிரிஷூடனும் பிரவீனாவுக்கு தகராறு ஏற்பட்டிருக்கிறது.

    இதனால் அவரை பிரிந்து செல்ல அவர் முடிவு செய்தார். இதனையறிறந்த கிரிஷ் நேற்று அவருடன் தகராறு செய்திருக்கிறார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. அப்போது அவர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பிரவீனாவை சரமாரியாக குத்தினார்.

    இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பிரவீனாவை மட்டுமின்றி அவரது மூத்த மகளான அனர்காவையும் கிரிஷ் கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் சிறுமியின் கழுத்து, காது உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    இந்தநிலையில் பிரவீனா மற்றும் அவரது மகள் வெட்டப்பட்டதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பிரவீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சிறுமி அனர்காவை மீட்டு சிகிச்சைக்காக மானந்தவாடி தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    பிரவீனா மற்றும் அவரது மூத்த மகள் வெட்டப்பட்ட நிலையில், அவரது இளைய மகளான அபினா எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. வீடு மற்றும் அதனை சுற்றியுளள பகுதிகளில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. அவர் தனது தாய் மற்றும் அக்காவை கிரிஷ் கத்தியால் வெட்டுவதை பார்த்து பயத்தில் அங்கிருந்து எங்காவது சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது.

    இதையடுத்து தாயை கொலை செய்தபின், சிறுமியை கிரீஷ் காட்டிற்குள் கடத்தி சென்றது தெரிய வந்தது.

    அடர்ந்த வனப்பகுதிக்குள் கடத்திச் செல்லப்பட்ட சிறுமியை ட்ரோன் மூலம் தேடிய போலீசார், சிறுமியை கண்டுபிடித்து கிரீஷை கைது செய்தனர்.

    Next Story
    ×