என் மலர்tooltip icon

    இந்தியா

    சாலையில் ஆம்லெட் போட்ட பெண்- வீடியோ வைரல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சாலையில் ஆம்லெட் போட்ட பெண்- வீடியோ வைரல்

    • வீடியோ வைரலாகி 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் சிலர் அந்த பெண்ணின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்தியாவில் கடந்த மாதம் முதலே பல நகரங்களிலும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த வெப்ப அலைக்கு காலநிலை மாற்றம் முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வெப்ப அலையால் உடல் சோர்வு, வெப்ப பக்கவாதம் போன்றவற்றால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கவலைகளுக்கு மத்தியில் வெயிலின் உக்கிரத்தை காட்டும் ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

    அந்த வகையில் சாலை ஓரத்தில் பெண் ஒருவர் ஆம்லெட் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதில் சிவப்பு நிற உடை அணிந்த பெண் ஒருவர் சாலை ஓரத்தில் அமர்ந்து தண்ணீர் ஊற்றி சாலையை சுத்தம் செய்கிறார். பின்னர் கடாயில் ஆம்லெட் போடுவது போன்று சாலையில் எண்ணெயை ஊற்றி, முட்டையை உடைத்து போட்டு நேரடியாக சாலையில் ஆம்லெட் சமைக்கும் காட்சிகள் உள்ளன.

    இந்த வீடியோ வைரலாகி 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. வீடியோவை பார்த்த பயனர்கள் சிலர் அந்த பெண்ணின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×