என் மலர்tooltip icon

    இந்தியா

    UPI பரிவர்த்தனைக்கு இனிமேல் கட்டணமா?  - ரிசர்வ் வங்கி ஆளுநர் கறார்
    X

    UPI பரிவர்த்தனைக்கு இனிமேல் கட்டணமா? - ரிசர்வ் வங்கி ஆளுநர் கறார்

    • UPI-க்கும் செலவுகள் உள்ளன, யாராவது ஒருவர் அதனை ஏற்கத்தான் வேண்டும்
    • இந்த மானிய மாதிரி நீண்டகாலம் தொடர முடியாது

    இந்தியாவில் கோடிக்கணக்கானோர் UPI பணபரிவர்தனைகளை தினந்தோறும் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் UPI ரிவர்தனைகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

    நேற்று சென்னையில் நடந்த பணவியல் கொள்கைக் குழு (MPC) கூட்டத்திற்குப் பிந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர்,"UPI பரிவர்த்தனை எப்போதும் இலவசமாகவே இருக்கும் என நான் ஒருபோதும் கூறவில்லை. UPI-க்கும் செலவுகள் உள்ளன, யாராவது ஒருவர் அதனை ஏற்கத்தான் வேண்டும்" என்று தெரிவித்தார்.

    தற்போது அரசு மற்றும் வங்கிகள் மானியமளித்து UPI யை இயக்கி வருவதாகவும், இந்த மாதிரி நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்குமா என்ற கேள்வி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    முன்னதாக ஜூலை 2025-ல் நடந்த பைனான்சியல் எக்ஸ்பிரஸ் BFSI உச்சி மாநாட்டில், "UPI யை இயக்குவதற்கு அரசு, வங்கிகள், அல்லது பயனர்கள் செலவை ஏற்க வேண்டும். இந்த மானிய மாதிரி நீண்டகாலம் தொடர முடியாது" என்று சஞ்சய் மல்கோத்ரா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×