என் மலர்tooltip icon

    இந்தியா

    காட்டு யானை தாக்கி 2 பேர் பலி
    X

    காட்டு யானை தாக்கி 2 பேர் பலி

    • காட்டு யானையால் தாக்கப்பட்டு 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
    • காயம் அடைந்த ராஜு மற்றும் அவரது மகன் சுதீப் ஆகியோர் நகர அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா தேவரபுராவை சேர்ந்த அன்னையா (வயது41) மற்றும் மைசூர் மாவட்டம் எச்டி கோட் தாலுகா பல்லே வனப்பகுதியை சேர்ந்த சுஷில் (46) ராஜு மற்றும் இவரது மகன் சுதீப் உள்ளிட்டோர் தேவரபுராவில் இருந்து காபி தோட்டத்திற்கு வேலைக்கு சென்றனர்.

    அப்போது அன்னையா பகுதியில் காட்டு யானையால் தாக்கப்பட்டு 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இவர்கள் உடல்களை மண்டல வன அதிகாரி கங்காதர் தலைமையிலான வன குழுவினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த ராஜு மற்றும் அவரது மகன் சுதீப் ஆகியோர் நகர அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×