என் மலர்
இந்தியா

ஒரே நேரத்தில் அதிக பக்தர்கள் குவிந்தால் நான் என்ன செய்வது?- 9 பேர் உயிரிழந்த கோவில் பூசாரியின் பதில்
- ஆந்திராவில் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் நின்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
- பாதுகாப்பு வேண்டும் என காவல்துறையிடம் அனுமதி ஏதும் கேட்கவில்லை.
ஆந்திர மாநிலம் காசிபுக்கா ஸ்ரீகாகுளத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 9 பக்தர்கள் மூச்சுதிணறி உயிரிழந்தனர்.
இது தொடர்பாக 94 வயதான அந்த கோவிலின் நிறுவனர் கூறுகையில் ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் வந்தால், நான் என்ன செய்ய வேண்டும்? எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முகுந்தா பண்டா கூறியதாவது:-
ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் வந்தால், நான் என்ன செய்ய வேண்டும்?. வழக்கமாக நான் வரிசையில் ஒவ்வொரு நபராக அனுப்புவேன். ஆனால் சம்பவத்தன்று, ஏராளமான மக்கள் வருகை தந்தனர். என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. நான் எந்த போலீஸ்க்கும் தகவல் தெரிவிக்கவில்லை.
நான் போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கவில்லை. எனக்கு தைரியம் இருக்கு. லைனில் செல்லுமாறு ஒவ்வொருவரிடமும் தெரிவித்தேன். மக்கள் தரிசனத்திற்கு வருகிறார்கள். அவர்கள் அவரசமாக முந்திச் சென்று, இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் நான் என்ன செய்ய முடியும்?.
இவ்வாறு முகுந்தா பண்டா தெரிவித்தார்.
போலீஸ் விசாரணையில் கோவில் தனியாருக்கு சொந்தமானது. முறையான ஒப்புதல் இல்லாமல் இயக்கப்பட்டு வந்துள்ளது. ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற தவறியது தெரியவந்துள்ளது.






