என் மலர்
இந்தியா

பிரியங்க் கார்கே முதல் தர முட்டாள்: அவர் மீது வழக்கு தொடருவோம்- அசாம் முதல்வர் ஆவேசம்
- கர்நாடக மாநிலங்களுக்கு வரும் முதலீடுகளை குஜராத், அசாமுக்கு திருப்புவதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு.
- செமிகண்டக்டர் போன்ற பெரிய நிறுவனங்களை அமைப்பதற்கான திறன் இல்லை என பிரியங்க் கார்கே கூறியதாக குற்றச்சாட்டு.
கர்நாடக மாநில அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகனுமான பிரியங்க் கார்கே செய்தி சேனலில், கர்நாடகாவில் முதலீடு செய்ய இருந்த நிறுவனங்கள் குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக மத்திய அரசு மீது குற்றம்சாட்டினார்.
அப்போது, செமிகண்டக்கர் உற்பத்தி போன்ற பெரிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான திறன் வடகிழக்கு மாநிலங்களில் இல்லை எனக் கூறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரியங்க் கார்கே மீது வழக்கு தொடர இருப்பதாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில் "பிரியங்க் கார்கே முதல் தர முட்டாள். அசாம் இளைஞர்களை அவர் இழிவுப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சி இதுவரை அவருக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.
அசாம் மக்களுக்கு கல்வி அறிவு இல்லை. போட்டியான இளைஞர்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இது அசாம் இளைஞர்களை இழிவுப்படுத்துவதாகும். இதனால் அவர் மீது வழக்கு தொடர்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.






