என் மலர்
இந்தியா

X
169 பேருடன் புறப்பட்ட விமானம் புவனேஷ்வரில் அவசரமாக தரையிறக்கம்
By
மாலை மலர்1 May 2024 8:58 PM IST

- சில நிமிடங்களில் தீடீரென ஆலங்கட்டி மழை பெய்தது.
- பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
புவனேஷ்வரில் இருந்து புதுடெல்லி நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்று அவசர அவசரமாக தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தீடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால், விமானம் சேதமடைந்தது.
சேதமடைந்த விமானத்தில் 169 பேர் பயணித்த நிலையில், புதுடெல்லி நோக்கி புறப்பட்ட விமானம் பத்தே நிமிடங்களில் பிஜூ பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஆலங்கட்டி மழை பெய்ததில் விமானத்தின் வின்ட்ஷீல்டு பகுதியில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
X