என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதியில் 12-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து
    X

    திருப்பதியில் 12-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து

    • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 18-ந் தேதியில் இருந்து 26-ந் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
    • 11-ந் தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் எதுவும் ஏற்கப்பட மாட்டாது.

    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 18-ந் தேதியில் இருந்து 26-ந் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.

    இதனையொட்டி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் ஆலய சுத்தம் செய்யும் நிகழ்ச்சி 12-ந் தேதி நடக்கிறது. எனவே 12-ந் தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    இதன் காரணமாக 11-ந் தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் எதுவும் ஏற்கப்பட மாட்டாது. பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×