என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: மகளிர் உலக கோப்பை வெற்றி..  நள்ளிரவில் வீதிகளில் திரண்ட மக்கள்.. நாடு முழுவதும் கொண்டாட்டம்
    X

    VIDEO: மகளிர் உலக கோப்பை வெற்றி.. நள்ளிரவில் வீதிகளில் திரண்ட மக்கள்.. நாடு முழுவதும் கொண்டாட்டம்

    • 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது.
    • தீப்தி வீட்டிற்கு வரும்போது, அவருக்கு ஆக்ரா முழுவதும் இருந்து ஒரு பிரமாண்டமான வரவேற்பு கிடைக்கும்.

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

    45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்த வெற்றியை நாடு முழுவதிலும் மக்கள் இரவு நேரத்தில் வீதிகளில் திரண்டு கொண்டாடி வருகின்றனர்.

    டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் வீதிகளில் திரண்ட மக்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும் பட்டாசுகளை வெடித்தும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

    பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த கொண்டாட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீராங்கனை தீப்தி சர்மாவின் தந்தை, "நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறோம். முழு தேசமும் கொண்டாடுகிறது. தீப்தி வீட்டிற்கு வரும்போது, அவருக்கு ஆக்ரா முழுவதும் இருந்து ஒரு பிரமாண்டமான வரவேற்பு கிடைக்கும். அவர் இன்று மிகவும் சிறப்பாக செயல்பட்டார்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×