search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரள குண்டுவெடிப்பு: போலீசில் சரணடைவதற்கு முன்பு பேஸ்புக் லைவில் பேசிய மார்டின்- வைரலாகும் பரபரப்பு வீடியோ
    X

    கேரள குண்டுவெடிப்பு: போலீசில் சரணடைவதற்கு முன்பு பேஸ்புக் லைவில் பேசிய மார்டின்- வைரலாகும் பரபரப்பு வீடியோ

    • 90 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழப்பு.
    • குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

    கேரளாவின் களமசேரியில் ஜெஹோவா'ஸ் விட்னெசஸ் சபையின் மத வழிபாட்டு கூட்டத்தில் இன்று காலை 9 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 25 பேர் படுகாயமடைந்தனர்.

    மேலும், 90 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக, நான் தான் குண்டு வைத்தேன் என்று கூறி சம்பவத்திற்கு பொறுப்பேற்று கேரளாவை சேர்ந்த டோமினிக் மார்ட்டின் என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். மார்ட்டினை ரகசிய காவலில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், மார்ட்டின் போலீசில் சரணடைவதற்கு முன்பு பேஸ்புக் லைவில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், " ஜெஹோவா'ஸ் விட்செனசஸ் சபையின் போதனைகள் மீது தனக்கு உடன்பாடு இல்லை. அச்சபையின் கருத்துகள் தேசத்திற்கே ஆபத்தானது.

    தனது புகார்களை அச்சபை கண்டுகொள்ளவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஜெஹோவா விட்னெசஸ் என்பது கிறிஸ்தவ மதத்தில் மிகச்சிறிய பிரிவு ஆகும். இந்த பிரிவை உலகம் முழுவதும் சுமார் 85 லட்சம் பேர் பின்பற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×