என் மலர்
இந்தியா

இந்திய போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான்: பயனற்ற அணி என ஓவைசி விமர்சனம்
- அவர்கள் நம்மிடம் விளையாட மாட்டோம் எனச் சொல்கிறார்கள்.
- மக்களாகிய நாம் அமைதியாக உட்கார்ந்து கொண்டு, கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் இருந்து வங்கதேசம் விலகியது. வங்கதேசத்திற்கு ஆதரவாக, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறுகையில் "இந்தியா டி20 உலகக் கோப்பையை நடத்துகிறது. பயனற்ற பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக விளையாடமாட்டோம் எனச் சொல்கிறது. நாம் அவர்களிடம், "நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? இங்கிருந்து வெளியேறுங்கள்" என்று சொல்ல வேண்டும். அவர்கள் நம்மிடம் விளையாட மாட்டோம் எனச் சொல்கிறார்கள். மக்களாகிய நாம் அமைதியாக உட்கார்ந்து கொண்டு, கேட்டுக் கொண்டிருக்கிறோம்" என்றார்.
Next Story






