search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்து முறைப்படிதான் திருமணம் செய்வேன்... ஆந்திர பெண்ணை கைப்பிடித்த அமெரிக்க மாப்பிள்ளை
    X

    இந்து முறைப்படிதான் திருமணம் செய்வேன்... ஆந்திர பெண்ணை கைப்பிடித்த அமெரிக்க மாப்பிள்ளை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆந்திர பெண் ஹர்ஷவி அமெரிக்காவில் வேலை செய்தபோது, உடன் பணியாற்றும் அமெரிக்கரை காதலித்துள்ளார்
    • திருப்பதியில் உள்ள விடுதி ஒன்றில் ஹர்ஷவி - டொமியன் பிராங்க் திருமணம் நடைபெற்றது.

    திருப்பதி:

    திருப்பதியைச் சேர்ந்த ஹர்ஷவி என்ற பெண், அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அங்கு பொது மேலாளராக பணியாற்றும் அமெரிக்காவை சேர்ந்த டொமியன் பிராங்க் என்பவருடன் உண்டான நட்பு பின்னாளில் காதலாக மாறியுள்ளது.

    இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து அமெரிக்காவிலேயே திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், அமெரிக்க மாப்பிள்ளை தான் இந்து முறைப்படி தான் திருமணம் முடிப்பேன் என்று திட்டவட்டமாக கூறி உள்ளார். அவரது விருப்பப்படியே நேற்று இரவு திருப்பதியில் உள்ள விடுதி ஒன்றில் ஹர்ஷவி - டொமியன் பிராங்க் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இரு வீட்டாரும் மணமக்களை வாழ்த்தினர்.

    Next Story
    ×