என் மலர்
இந்தியா

தைரியம் இருந்தால் வந்துபார் என மம்தா கட்சி எம்.பி. சவால்: மோட்டார் சைக்கிள் பேரணி மேற்கொண்ட மத்திய அமைச்சர்
- மேற்கு வங்கத்தில் SIR பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டம்.
- திரிணாமுல் காங்கிரஸ் கட்சி SIR-ஐ கடுமையாக விமர்சித்து வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கொள்ளப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும், பாஜக தலைவர்களுக்கும் இடையில் வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.
மத்திய அமைச்சரும், மேற்கு வங்க பாஜக முன்னாள் தலைவருமான சுகந்தா மஜும்தார் "மேற்கு வங்கத்தில் SIR பணியின்போது மத்திய படைகள் குவிக்கப்படும். ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால், துப்பாக்கிச்சூடு கூட நடத்தப்படும்" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு மம்தா கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தனர். ஸ்ரீராம்பூர் மக்களவை தொகுதி திரிணாமுல் கட்சி எம்.பி. கல்யாண் சிங், "மந்திரியான சுகந்தா மஜும்தாரிடம், CISF தோட்டாக்கள் அவர்களை தாக்கும் எனச் சொல்லுங்கள். உங்களுக்கு தையரிம் இருந்தால் ஸ்ரீராம்பூருக்கு வாரங்கள். வந்த பின்னர் எப்படி வீடு திரும்புவீரக்ள் பார்ப்போம்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சுகந்தா மஜும்தார் சவாலை ஏற்று, பாஜக தொண்டர்களுடன் மோட்டார் சைக்கிளில் பேரணி சென்றார். பின்னர் தொண்டர்களிடம் பேசும்போது "பாஜக வன்முறை அரசியலை நம்புவதில்லை. ஆனால், கல்யாண் பானர்ஜி அரசியல் விளையாட்டு விளையாட விரும்பினா், நான் நம்முடைய தொண்டர்களை அதே விளையாட்டை விளையாட கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.






