என் மலர்tooltip icon

    இந்தியா

    அகமதாபாத் வரும் வரை விமானத்தில் எந்த பிரச்சனையும் இல்லை- மத்திய அமைச்சர் ராம் மோகன்
    X

    அகமதாபாத் வரும் வரை விமானத்தில் எந்த பிரச்சனையும் இல்லை- மத்திய அமைச்சர் ராம் மோகன்

    • விமான விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது.
    • போயிங் டிரீம்லைனர் ரக விமானங்களில் கூடுதல் ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

    அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து துறை சார்பில் மத்திய அமைச்சர் ராம் மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * டெல்லியில் இருந்து அகமதாபாத் வரும் வரை விமானத்தில் எந்த பிரச்சனையும் இல்லை.

    * 650 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து ஏர் இந்தியா விமானம் நொறுங்கியது.

    * அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 2 கி.மீ. தொலைவில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது.

    * விமான விபத்தில் மொத்தமாக 270 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    * விமான விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது.

    * இந்த சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

    * மத்திய, மாநில அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    * கருப்புப் பெட்டியில் உள்ள தகவல்களை மீட்பதற்கான பணி நடைபெற்று வருகிறது.

    * எதிர்காலத்தில் இதுபோன்ற பெரும் விபத்துகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    * விமான விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய 3 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    * போயிங் டிரீம்லைனர் ரக விமானங்களில் கூடுதல் ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×