search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரிக்ஸ் நாடுகளின் நிதி மந்திரிகள் ஆலோசனை கூட்டம்- நிர்மலா சீதாராமன் பங்கேற்பு
    X

    நிர்மலா சீதாராமன்

    பிரிக்ஸ் நாடுகளின் நிதி மந்திரிகள் ஆலோசனை கூட்டம்- நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

    • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முதலீடுகளை அதிகரித்தல் துணை புரியும்
    • நீடித்த வளர்ச்சியை அடைவதற்கான யோசனைகளை பிரிக்ஸ் அமைப்பு தெரிவிக்க வேண்டும்

    சீனா தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் 2 வது கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

    காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் 2022ம் ஆண்டிற்கான பிரிக்ஸ் நிதி ஒத்துழைப்பு அறிக்கை உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் பேசிய திருமதி நிர்மலா சீதாராமன், அனுபவங்கள் குறித்து உரையாடுதல், பரிமாறிக்கொள்ளுதல், நீடித்த வளர்ச்சியை அடைவதற்கான யோசனைகளை தெரிவித்தல் ஆகியவற்றில் பிரிக்ஸ் அமைப்பு தொடர்ந்து செயல்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நிதிச் செலவினங்களும் முதலீடுகளை அதிகரித்தலும் தொடர்ந்து துணைபுரியும் என்று அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×