Union Budget 2026: விலை குறையும், விலை உயரும் பொருட்கள் எவை? - முழு பட்டியல்

17 முக்கிய புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.பங்குகளை வாங்குதல் மற்றும் விற்றலுக்கான செலவு இனி அதிகரிக்கும்.
Union Budget 2026: விலை குறையும், விலை உயரும் பொருட்கள் எவை? - முழு பட்டியல்
Published on

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2026-27 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதில் சுங்க வரி மற்றும் பிற வரிகளில் செய்துள்ள மாற்றங்களால் சில பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

விலை குறையும் பொருட்கள்:

செல்போன்கள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்கள் இறக்குமதி மீதான வரி குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை குறையும்.

தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் உள்ளிட்ட அரிய உலோகங்களின் மீதான இறக்குமதி வரி கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

17 முக்கிய புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிர்காக்கும்  7 மருந்துகளுக்கு வரிவிதிப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

தோல் பொருட்கள் மற்றும் காலணிகள் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.

தனிநபர் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரி 20%-லிருந்து 10%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு உபகரணங்கள் இறக்குமதி வரி குறைப்பால் விளையாட்டுப் பொருட்களின் விலை குறையும்.

சோலார் பேனல்கள், லித்தியம் பேட்டரி பாகங்கள், சிவிலியன் பயிற்சி விமான பாகங்கள், நீரிழிவு தொடர்பான மருந்துகள் ஆகியவற்றின் வரி குறைகிறது. 

சர்வதேச கடற்பரப்பில் இந்திய மீனவர்களால் பிடிக்கப்படும் மீன்கள், அணு மின் திட்டங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், மைக்ரோவேவ் அடுப்புகள் ஆகியவற்றுக்கு அடிப்படை சுங்க வரி (BCD) விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிற்குப் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு நிம்மதி தரும் விதமாக, கல்விக்கான பணம் அனுப்புதல் மற்றும் சுற்றுலா தொடர்பான TCS வரி விகிதம் 20%-லிருந்து 2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது வெளிநாட்டுப் படிப்புச் செலவைக் கணிசமாகக் குறைக்கும்.

விலை உயரும் பொருட்கள்:

சிகரெட் மற்றும் பீடி, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட இதர புகையிலை பொருட்கள் மீதான NCCD வரி உயர்த்தப்பட்டுள்ளதால் அவற்றின் விலை உயரும். இரும்பு, நிலக்கரி, உப்பு போன்ற கனிமங்கள் ஆகியவை விலையும் உயருகின்றன.

இறக்குமதி செய்யப்படும் சில வகை மதுபானங்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் சில குறிப்பிட்ட ஆடம்பர இறக்குமதி பொருட்களின் விலை உயரக்கூடும். 

பங்குச் சந்தை வர்த்தகத்தில் பத்திர பரிவர்த்தனை வரி (STT) அதிகரிக்கப்பட்டுள்ளதால், பங்குகளை வாங்குதல் மற்றும் விற்றலுக்கான செலவு இனி அதிகரிக்கும்.      

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com