search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கங்கை ஆற்றில் உடைந்து விழுந்த பாலம்- விசாரணைக்கு உத்தரவிட்ட பீகார் முதல்வர்
    X

    கங்கை ஆற்றில் உடைந்து விழுந்த பாலம்- விசாரணைக்கு உத்தரவிட்ட பீகார் முதல்வர்

    • தரமற்ற வகையில் பாலம் கட்டப்பட்டுள்ளதாக பாஜக கூறி உள்ளது.
    • மீண்டும் பாலம் இடிந்து விழுந்ததால் முதல்வர் நிதிஷ் குமார் மீது குற்றம்சாட்டி உள்ளது.

    பாட்னா:

    பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் பாலம் கட்டப்படுகிறது. கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பாலத்தின் இரண்டு பகுதிகள் இன்று மாலை திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தன. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டபோது யாராவது வேலை செய்துகொண்டிருந்தார்களா? என தெரியவில்லை. உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட புயல் காரணமாக பாலம் சேதமடைந்தது. ககாரியா, அகுவானி மற்றும் சுல்தாங்கஞ்ச் பகுதிகளுக்கிடையே கங்கை நதியில் பாலத்தின் மையப்பகுதி கட்டப்பட்டு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இப்போது மீண்டும் பாலம் இடிந்து விழுந்ததால் முதல்வர் நிதிஷ் குமார் மீது பாஜக குற்றம்சாட்டி உள்ளது. தரமற்ற வகையில் பாலம் கட்டப்பட்டுள்ளதாக பாஜக கூறி உள்ளது. மேலும், முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

    Next Story
    ×