search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரகாண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்
    X

    உத்தரகாண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்

    • பொது சிவில் சட்டம் அமலாகும் என தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது
    • பொது சிவில் சட்டம் தொடர்பாக அரசு 5-பேர் கொண்ட குழுவை அமைத்தது

    இன்று உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட (Uniform Civil Code) மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    இது சட்டமாக மாறும் போது இந்தியாவிலேயே பொது சிவில் சட்டத்தை முதலில் அமல்படுத்திய மாநிலம் எனும் பெயர் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு கிடைக்கும்.

    சட்டசபை தேர்தலுக்கு முன் தனது தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததும் இதன் சாத்தியக்கூறுகள் மற்றும் சாதக-பாதகங்கள் மற்றும் சட்ட நுணுக்கங்கள் குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை பா.ஜ.க. அரசு அமைத்தது.

    இக்குழு அறித்த அறிக்கையின் பேரில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அரசு நேற்று இதற்கு ஒப்புதல் வழங்கியது.

    இன்று இச்சட்ட மசோதாவை தாக்கல் செய்ய கூட்டப்பட்ட சிறப்பு கூட்டத்தொடரில் முதலமைச்சர் தாமி மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் "ஜெய் ஸ்ரீராம்" என உற்சாகமாக கோஷம் போட்டனர்.

    குடிமக்களுக்கான தனிநபர் சட்டம் மதம் மற்றும் பாலினம் கடந்து ஒரே தளத்தில் அமையும் வகையில் இருக்க அமைக்கப்பட்டுள்ள இந்த மசோதாவின்படி சொத்துக்களில் ஆண் மற்றும் பெண்ணுக்கு சம உரிமை, தத்து எடுக்கும் குழந்தைக்கும் சொத்துக்களில் சம உரிமை, பலதார திருமண தடை, குழந்தை திருமண தடை, ஒரே திருமண வயது உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இடம் பெறுகின்றன.

    மசோதா தாக்கலான நிலையில் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 02:00 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×