என் மலர்
இந்தியா

தெலுங்கானாவில் போலி தங்க நாணயங்களை கொடுத்து ரூ.8 லட்சம் மோசடி- 2 பேர் கைது
- போலீசார் விரைந்து சென்று மாரப்பா மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
- தலைமறைவாக உள்ள லாரி டிரைவர் சுரேஷை தேடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், சாலக்குர்தி தாண்டவை சேர்ந்தவர் பாஸ்கர். தொழிலதிபர். இவரிடம் விஜய நகரம் மாவட்டம், கோட்டூர், பட்டண அள்ளி சேர்ந்த மாரப்பா (58), பிரகாஷ் (29), லாரி டிரைவர் சுரேஷ் ஆகியோர் பாஸ்கரை சந்தித்தனர்.
தங்களிடம் ½ கிலோ எடையுள்ள ஒரிஜினல் தங்க நாணயங்கள் உள்ளதாக தெரிவித்தனர். அதிக மதிப்புடைய தங்க நாணயங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக கூறினர். அவர்கள் வைத்திருக்கும் தங்க நாணயங்களுக்கு ஈடாக பாஸ்கர் ரூ.8 லட்சம் பணம் கொடுத்தார்.
பின்னர் அவர்கள் கொடுத்த தங்க நாணயங்கள் போலியானது என தெரிய வந்தது. இது குறித்து பாஸ்கர் ஜகலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று மாரப்பா மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள லாரி டிரைவர் சுரேஷை தேடி வருகின்றனர்.
Next Story






