என் மலர்
இந்தியா

பீகாரில் 7.42 கோடி வாக்காளர்கள்: ஞானேஷ் குமார்
- 3.92 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். 3.5 கோடி பேர் பெண் வாக்காளர்கள்.
- 14 லட்சம் பேர் முதன்முறையாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 243 உறுப்பினர்களை கொண்ட அந்த மாநில சட்டசபையின் பதவி காலம் நவம்பர் 22-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
பீகார் தேர்தல் தயார் நிலை குறித்து கடந்த 2 நாட்களாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாட்னாவில் ஆய்வு மேற்கொண்டார். பீகார் தேர்தலில் 17 புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று மாலை தேர்தல் தேதியை அறிவித்தார்.
அதன்படி,
SIR-க்கு பிறகு பீகாரில் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.92 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். 3.5 கோடி பேர் பெண் வாக்காளர்கள். 14 லட்சம் பேர் புது வாக்காளர்கள்.
தேர்தலை வெளிப்படையாகவும், அமைதியான அடிப்படையில் நடத்துவதை உறுதி செய்ய விரும்புகிறோம்.
100 வயதிற்கு மேற்பட்டோர் 14 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 90,712 வாக்கு மையங்கள் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.
எந்தவொரு வன்முறையையும் சகித்துக் கொள்ளக் கூடாது நிர்வாக அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளம் மற்றும் மற்ற பிளாட்பார்ம் மூலமாக போலி செய்திகள் வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஞானேஷ் குமார் தெரிவித்தார்.






