என் மலர்
இந்தியா

இதைக்கூட விட்டு வைக்க மாட்டீங்களா? வெளியான புது கேம்... பொங்கியெழுந்த திருப்பதி தேவஸ்தானம்
- அனிமேஷன் வீடியோ தொகுப்பு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- வீடியோ கேம் முழுவதையும் ஆன்லைனில் இருந்து நீக்க வேண்டும் என தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை உள்ளிட்டவை 3டி அனிமேஷன் மூலம் வீடியோ கேமாக தயாரித்து ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அனிமேஷன் வீடியோ தொகுப்பு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோ கேமில் தேவஸ்தான தொலைக்காட்சிகளில் வரும் சில அனிமேஷன் வீடியோக்கள், திருப்பதியில் ஒளிபரப்பப்படும் பக்தி பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் புனிதமாக கருதும் ஆன்மிகத்தை விளையாட்டாக செய்து அதனை இழிவுபடுத்தும் விதமாக வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு உள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தேவஸ்தான நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பக்தர்களின் மனம் புண்படும் விதமாக செயல்பட்டுள்ள வீடியோ கேம் நிறுவனங்களின் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
ஏழுமலையான் கோவில் வடிவமைப்பில் தயாராகி உள்ள வீடியோ கேம் முழுவதையும் ஆன்லைனில் இருந்து நீக்க வேண்டும் என தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






