search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    பிரதமர் மோடி 3-வது முறையாக பதவியேற்ற பின் நடைபெறும் முதல் மன் கி பாத்...
    X

    பிரதமர் மோடி 3-வது முறையாக பதவியேற்ற பின் நடைபெறும் முதல் மன் கி பாத்...

    • கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
    • நாடு முழுவதும் உள்ள மக்களுடன் பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடுகிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

    இதற்கிடையே, டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்றார்.

    இந்நிலையில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் நாட்டு மக்களிடையே வானொலி மூலம் உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி இந்த மாதம் ஒளிபரப்பாக உள்ளது.

    இந்நிலையில் வரும் 30-ம் தேதி மன் கி பாத் மூலம் பிரதமர் மோடி மக்களிடம் பேசுகிறார்.

    'மனதின் குரல்' மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள மக்களுடன் பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடுகிறார்.

    Next Story
    ×