டிவி சேனல்களின் டிஆர்பி 4 வாரத்துக்கு நிறுத்தம்: மத்திய அரசு #TRP

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரான் நாட்டின்மீது போர் தொடுத்தன. டிவி சேனல்கள் பரபரப்பை உண்டாக்கக் கூடிய செய்திகளை வெளியிடுகின்றன.
டிவி சேனல்களின் டிஆர்பி 4 வாரத்துக்கு நிறுத்தம்: மத்திய அரசு #TRP
Published on

புதுடெல்லி:

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போர் குறித்து சில டிவி சேனல்கள் டி.ஆர்.பி. மதிப்பீடுகளுக்காகத் தேவையற்ற பரபரப்பை உண்டாக்கக் கூடிய செய்திகள் மற்றும் ஊடகத் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் இடையில் பதற்றமான சூழல் ஏற்படக் கூடும் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில், மக்களின் நலனுக்காக டிவி சேனல்களின் தொலைக்காட்சி மதிப்பீட்டுப் புள்ளிகளை 4 வாரங்கள் அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரையில் நிறுத்தி வைப்பதாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com