என் மலர்
இந்தியா

X
ராகுல் காந்தி வீடு முன்பு போராட்டம்- பி.ஆர்.எஸ் கட்சி அறிவிப்பு
By
Maalaimalar5 Oct 2024 2:17 PM IST (Updated: 5 Oct 2024 2:22 PM IST)

- காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது.
- மாநிலத்தில் கடன் தள்ளுபடிக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக பிஆர்எஸ் கட்சி மூத்த தலைவர் ஹரிஷ் ராவ் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. பதவியேற்றதும் முதல் கையெழுத்து விவசாய கடன் தள்ளுபடிக்காக தான் இருக்கும் என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி உறுதி அளித்தார்.
ஆனால் அவர் அதன்படி செயல்படவில்லை. மாநிலத்தில் கடன் தள்ளுபடிக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். 22 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.
தெலுங்கானா மாநிலத்தில் விரைவில் விவசாயிகள் கடன் தள்ளுபடி அமல்படுத்தாவிட்டால் காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வீட்டு முன்பு பி.ஆர்.எஸ். கட்சி போராட்டம் நடத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
X