என் மலர்
இந்தியா

போலி மதுபானம் விற்பனை செய்த தெலுங்கு தேச நிர்வாகிகள் - கட்சியை விட்டு நீக்கிய சந்திரபாபு நாயுடு
- இந்த விவகாரம் ஆந்திர மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
- போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்தோரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் முலக்கலச்செருவு பகுதியில் தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகள் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த ஜனார்தன் ராவ், கோட்டராஜு, ராஜேஷ், ஸ்ரீனிவாச ராவ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் ஆந்திர மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்த குற்ற செயல்களில் ஈடுபட்ட தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சித் தலைவரும், முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு உத்தரவு பிறப்பித்தார்.
Next Story






