search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் காலியான ஆத்திரத்தில் ஹெல்மெட்டால் அடித்து தம்பியை கொன்ற வாலிபர்
    X

    மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் காலியான ஆத்திரத்தில் ஹெல்மெட்டால் அடித்து தம்பியை கொன்ற வாலிபர்

    • பெட்ரோல் போடுவதற்கு பணம் தருமாறு ஷைனிடம் ஷெரின் கேட்டுள்ளார்.
    • குடிபோதையில் ஹெல்மெட்டால் அடித்து தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கஞ்சாணி நாலாம்கல்லு பகுதியை சேர்ந்தவர் ஷைன்(வயது28). திருச்சியில் பெயிண்டராக வேலைபார்த்து வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சூர் வந்திருக்கிறார்.

    சம்பவத்தன்று அவர் தனது அண்ணன் ஷெரின் மற்றும் அண்ணனின் நண்பர் அருண் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார். மோட்டார் சைக்கிளை அருண் ஓட்டிச்செல்ல, ஷைன் மற்றும் ஷெரின் ஆகிய இருவரும் பின்னால் அமர்ந்து சென்றனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து காயமடைந்ததாக கூறி திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் ஷைனை சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ஷைன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    அதில் ஷைன் தவறி கீழே விழுந்ததில் இறக்க வில்லை என்பதும், அவர் தலையில் பலமாக தாக்கப்பட்டதில் இறந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஷைனின் அண்ணன் ஷெரின் மற்றும் அவரது நண்பர் அருண் ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் ஷைன் கொல்லப்பட்டதை இருவரும் ஒப்புக் கொண்டனர். சம்பவத்தன்று 3பேரும் மது குடிக்க சென்றுள்ளனர். மது குடித்துவிட்டு 3 பேரும் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்துள்ளனர். அப்போது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளில பெட்ரோல் காலியாகி விட்டது. இதனால் பெட்ரோல் போடுவதற்கு பணம் தருமாறு ஷைனிடம் ஷெரின் கேட்டுள்ளார்.

    ஆனால் அவர் பணம் தர மறுத்திருக்கிறார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஷெரின், தன்னிடம் இருந்த ஹெல்மெட்டால் ஷைனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

    குடி போதையில் இருந்த ஷைன் மயங்கி விழுந்து விட்டார். இதையடுது மோட்டார் சைக்கிளில் சென்றபோது தவறிவிழுந்து விட்டதாக கூறி ஷைனை ஆஸ்பத்திரியில் அனுமதித்த நிலையில் இறந்துவிட்டார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஷெரின் மற்றும் அருணை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் ஹெல்மெட்டால் அடித்து தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×