search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மதுரா மசூதி ஆய்வுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை
    X

    மதுரா மசூதி ஆய்வுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை

    • அலகாபாத் ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து மசூதியின் அறக்கட்டளை நிர்வாக குழு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
    • மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ணர் கோவில் உள்ளது. அதையொட்டி ஷாஹி ஈத்கா மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி கடந்த 1669-70-ம் ஆண்டில் அப்போதைய முகலாய மன்னர் ஓளரங்க சீப் உத்தரவின்படி கிருஷ்ண ஜென்மபூமி பகுதியில் கட்டப்பட்டது என்று புகார் எழுந்தது.

    இதுகுறித்து மதுரா கோர்ட்டில் இந்து அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த மதுரா கோர்ட்டு ஷாஹி ஈத்கா மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மசூதி தரப்பில் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு கிருஷ்ணர் கோவிலுக்கு அருகில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியில் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த அனுமதி அளித்து கடந்த மாதம் 14-ந் தேதி உத்தரவிட்டது. ஆய்வை மேற்பார்வையிட ஆணையராக வக்கீல் ஒருவரை நியமிக்கவும் ஒப்புக் கொண்டது.

    தொல்லியல் ஆய்வின் நடைமுறைகள் குறித்து வருகிற 18-ந் தேதி நடைபெறும் அடுத்த கட்ட விசாரணையின் போது விவாதிக்கப்படும் என்றும் கோர்ட்டு தெரிவித்தது.

    அலகாபாத் ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து மசூதியின் அறக்கட்டளை நிர்வாக குழு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

    இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியை நீதிமன்ற கண்காணிப்பில் ஆய்வு செய்ய அனுமதித்த அலகாபாத் ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்து அமைப்புகள் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Next Story
    ×