search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு: சிவசேனா மனு மீது 11-ந்தேதி விசாரணை
    X

    ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு: சிவசேனா மனு மீது 11-ந்தேதி விசாரணை

    • மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுதாக்கல் செய்யப்பட்டது.
    • இந்த மனுவை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது.

    மகாராஷ்ராவில் முதல்-மந்திரியாக இருந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் எதிர்ப்பு தெரிவித்ததால் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச் கூறும்போது, ஜூலை 11-ந்தேதி பொருத்தமான பெஞ்ச் முன் பட்டியலிடப்படும் என்றனர்.

    சிவசேனா தலைவர் சுபாஷ் தேசாய் சார்பில் ஆஜரான வக்கீல் தேவதத் காமத் கூறும்போது, 11-ந்தேதி விசாரணைக்கு வரவிருக்கும் புதிய மனுவுடன் நிலுவையில் உள்ள மற்ற மனுக்களையும் பட்டியலிட கோரி இருக்கிறோம் என்றார்.

    Next Story
    ×