என் மலர்
இந்தியா

பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரி கைது
- பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்த நபரிடம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
- ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை, போலீஸ் அதிகாரியிடம் அந்த நபர் கொடுத்திருக்கிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் சக்கரக்கல் பகுதியை சேர்ந்த ஒருவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்திருந்தார். அதற்கான சரிபார்ப்புக்கு வந்திருந்த சக்கரக்கல் சிவில் போலீஸ் அதிகாரி உமர் பாரூக் , பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்த நபரிடம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து அந்த நபர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அவர்கள் அறிவுறுத்தலின் படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை, போலீஸ் அதிகாரியிடம் அந்த நபர் கொடுத்திருக்கிறார். அதனை வாங்கியபோது போலீஸ் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு மற்றும் போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
Next Story






