என் மலர்
இந்தியா

பக்ரீத் பண்டிகையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து
- பிரதமர் மோடி இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
- மனித குலத்தின் நன்மைக்காக கூட்டு நல்வாழ்வு மற்றும் செழுமைக்கான உணர்வை மேம்படுத்த வேண்டும்.
இஸ்லாமியர்களின் பெருநாளான பக்ரீத் பண்டியை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, காலை முதலே இஸ்லாமியர்கள் பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பக்ரீத் பண்டிகையையொட்டி நாட்டின் முக்கியத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் மோடி இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஈத் முபாரக்! ஈத்-உல்-அதா நல்வாழ்த்துக்கள். மனித குலத்தின் நன்மைக்காக கூட்டு நல்வாழ்வு மற்றும் செழுமைக்கான உணர்வை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த பண்டிகை நம்மை ஊக்குவிக்கட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
Next Story