என் மலர்
இந்தியா

5-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- 1 மணி நிலவரப்படி 36.73% வாக்குப்பதிவு
- பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
- அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது.
5-ம் கட்டமாக இன்று நடைபெற்று வரும் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன. இந்த தொகுதிகளில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 5-ம் கட்ட தேர்தலில் 36.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
பீகார் - 34.62 சதவீதம்
மகாராஷ்டிரா- 27.78 சதவீதம்
மேற்கு வங்காளம்- 48.41 சதவீதம்
ஒடிசா - 35.31 சதவீதம்
ஜார்கண்ட்- 41.89 சதவீதம்
ஜம்மு காஷ்மீர்- 34.79 சதவீதம்
லடாக்- 52.02 சதவீதம்
உத்தரபிரதேசம்- 38.55 சதவீதம்
#LokSabhaElections2024 | 36.73% voter turnout recorded till 1 pm, in the fifth phase of elections.
— ANI (@ANI) May 20, 2024
Bihar 34.62%
Jammu & Kashmir 34.79%
Jharkhand 41.89%
Ladakh 52.02%
Maharashtra 27.78%
Odisha 35.31%
Uttar Pradesh 39.55%
West Bengal 48.41% pic.twitter.com/6cxi2tJsHq






