search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு அக்.15-ல் சந்திரசேகர ராவ் பிரசாரம் தொடங்குகிறார்
    X

    தெலுங்கானாவில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு அக்.15-ல் சந்திரசேகர ராவ் பிரசாரம் தொடங்குகிறார்

    • மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபட சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார்.
    • பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்திலிருந்து 2014-ம் ஆண்டு தெலுங்கானா மாநிலம் புதிதாக உருவானது.

    அப்போது மாநில பிரிவினைக்கு பெரும் பங்கு வகித்த சந்திரசேகர ராவ் கட்சி 63 இடங்களை கைபற்றி முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது. அதற்கு பின்னர் 2018-ம் ஆண்டு தேர்தலில் 88 இடங்களை பெற்று 2-வது முறையாக ஆட்சியை பிடித்தது.

    இந்த நிலையில் நவம்பர் மாதம் 30-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தெலுங்கானா மாநிலத்தில் முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் பல்வேறு வியூகங்கள் வகுத்து வருகிறார்.

    அவருக்கு ராசியான இடமாக கருதப்படும் ஹீஸ்னாபபாத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை வருகிற 15-ந்தேதி தொடங்குகிறார். அன்று காலை கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்.

    வழக்கம் போல காமரெட்டி பகுதியில் அவர் போட்டியிட முடிவு செய்துள்ளார். முன்னதாக கோனை பள்ளியில் உள்ள வெங்கடேஸ்வரா சாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் 15-ந்தேதி வேட்பாளர்களுக்கு பி-படிவங்களையும் அவர் வழங்குகிறார். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபட அவர் முடிவு செய்துள்ளார்.

    இதற்கான பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×