என் மலர்
இந்தியா

குஜராத் ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து- 125 நோயாளிகள் வெளியேற்றம்
- தீ விபத்தை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்து 125 நோயாளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
- தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சாஹிபாக் பகுதியில் 10 மாடி கொண்ட ராஜஸ்தான் மருத்துவமனை உள்ளது. தனியார் அறக்கட்டளையால் இந்த ஆஸ்பத்திரி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆஸ்பத்திரியின் அடித்தளத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் 20 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்து 125 நோயாளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் வேறு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
மருத்துவமனையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணியின் காரணமாக அடித்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த பல பொருட்கள் தீப்பிடித்து பெரும் புகையை ஏற்படுத்தியதாக தீயணைப்பு அதிகாரி தெரிவித்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட ஆஸ்பத்திரியின் அடித்தளத்தில் இருந்து வெளியே புகை வந்து கொண்டு இருப்பதாக அவர் கூறினார்.
தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






