என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்தி பேரணியில் இந்திரா காந்தி பாடல் பாடி அசத்திய மூதாட்டி
    X

    ராகுல் காந்தி பேரணியில் இந்திரா காந்தி பாடல் பாடி அசத்திய மூதாட்டி

    • ஊழல் நிறைந்த அரசை சந்திரசேகர ராவ் நடத்துகிறார்.
    • சந்திரசேகர ராவ் அரசு திருடிய பணத்தின் தொகை ஏழைகளின் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    அவர் சங்கரெட்டியில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது மூதாட்டி ஒருவர் ராகுல் காந்தியிடம் வந்து தான் தீவிர காங்கிரஸ் தொண்டர் என அறிமுகம் செய்தார்.

    மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி பற்றி எழுதிய பாடலை ராகுல் காந்தி முன்பு பாடி காட்டி அசத்தினார்.

    இதனைக் கண்டு வியந்த ராகுல் காந்தி தனது பாட்டிக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடலை தொடர்ந்து பாடுமாறு மூதாட்டியை ஊக்குவித்தார்.

    இந்த சம்பவம் ராகுல் காந்தி பேரணியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து அண்டோலில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    நான் தெலுங்கானா மாநிலத்தில் இளைஞர்களை அதிக அளவில் சந்தித்தேன். அவர்கள் தேர்வுக்கான பயிற்சிக்காக அதிக பணம் செலவு செய்கிறார்கள்.

    ஒவ்வொரு முறையும் பி ஆர் எஸ் அரசு வினாத்தாள் கசிவில் ஈடுபடுகிறது. மாநிலத்தில் 8000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசை சந்திரசேகர ராவ் நடத்துகிறார்.

    இது பிரபுத்துவ அரசாங்கமாக செயல்படுகிறது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். சந்திரசேகர ராவ் அரசு திருடிய பணத்தின் தொகை ஏழைகளின் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும். தெலுங்கானா போராட்டத்தில் உயிரிழவர்களின் குடும்பத்திற்கு 250 சதுர அடி நிலத்தை காங்கிரஸ் வழங்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.






    Next Story
    ×