என் மலர்
இந்தியா

டெல்லியில் திரவுபதி முர்முவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
- பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.
- எம்.பி.க்கள் தம்பிதுரை, என்.சந்திரசேகர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் நேற்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்முவை நேரில் சந்தத்து வாழ்த்து தெரிவித்தார்.
அவருடன் எம்.பி.க்கள் தம்பிதுரை, என்.சந்திரசேகர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
Next Story